Lakshya Sen Wins: தாமஸ் கோப்பை இறுதிப் போட்டி: ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற வீரரை வீழ்த்தி லக்ஷ்யா சென் அசத்தல் !
தாமஸ் கோப்பை இறுதிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் முதல் போட்டியில் லக்ஷ்யா சென் வெற்றி பெற்றுள்ளார்.
தாம்ஸ் கோப்பை ஆடவர் குழு பேட்மிண்டன் 2022 போட்டிகளில் தாய்லாந்து நாட்டில் கடந்த 8ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் லக்ஷ்யா சென்,கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய், சிராக் செட்டி-சத்விக் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றுள்ளது. இதில் காலிறுதியில் இந்திய அணி மலேசிய அணியை வீழ்த்தியது. அதன்பின்னர் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி டென்மார்க் 3-2 என்ற கணக்கில் வென்றது.
இந்நிலையில் இன்று இந்தியா அணி 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷிய அணியை எதிர்த்து இறுதி போட்டியில் களமிறங்கியுள்ளது. இதில் முதலில் ஆடவர் ஒற்றையர் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய வீரர் லக்ஷயா சென் கிண்டிங்கை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் முதல் கேமை 21-8 என்ற கணக்கில் எளிதாக வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் லக்ஷ்யா சென் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த கேமை 21-17 என்ற கணக்கில் வென்று 1-1 என சமன் செய்தார்.
Supersen mode 🔛@lakshya_sen demoslishes Olympic 🥉 medlist, Perfect start 🤩💪#TUC2022#ThomasCup2022#ThomasUberCups#IndiaontheRise#Badminton pic.twitter.com/yvS5W797I3
— BAI Media (@BAI_Media) May 15, 2022
இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க நடைபெற்ற மூன்றாவது கேமில் இருவரும் சிறப்பாக விளையாடினர். எனினும் லக்ஷ்யா சென் 21-16 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இறுதிப் போட்டியில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாகமுதல் முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை வரலாற்றில் இந்திய அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதற்கு முன்பாக இந்திய அணி 1952,1955 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் தாமஸ் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. அந்த மூன்று முறையும் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது. இதன்காரணமாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்திருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்