மேலும் அறிய

World Junior Championships: ஜூனியர் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக இளம் வீரர்!

ஸ்பெயினில் நடைபெற்ற ஜூனியர் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றயைர் பிரிவில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஸ்பெயினில் நடைபெற்ற ஜூனியர் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றயைர் பிரிவில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சங்கர், நேற்று நடைபெற்ற ஃபைனலில் சீன தைபேவின் குவோ குவான் லின்னை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 14-21, 20-22 என்ற செட் கணக்கில் இவர் தோல்வியைத் தழுவினார். இருப்பினும், பைனல் வரை முன்னேறிய அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

முன்னதாக, டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா அணி தற்போது வரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 போட்டி இன்று நடைபெற்றது.  இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. 

134 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் டி காக் அரஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வநடிக ரசோவ் ரன் எதுவும் எடுக்காமல் அரஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கேப்டன் பவுமா மற்றும் மார்க்கரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவுமா 10 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து மார்க்கரம் மற்றும் டேவிட் மில்லர் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இதன்காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்திருந்து. 

 கடைசி 10 ஓவர்களில் தென்னாப்பிரிக்க வெற்றிக்கு 96 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மார்க்கரம் அதிரடி காட்ட தொடங்கினார். அவர் 38 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் மில்லர் மார்க்கரமிற்கு பக்க பலமாக இருந்தார். இதனால் 15 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. 

அப்போது ஆட்டத்தின் 16 வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா மார்க்கரம் விக்கெட்டை எடுத்தார். எய்டன் மார்க்கரம் 41 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்தில் இருந்த மில்லர் அதிரடி காட்ட தொடங்கினார். இவர் குறிப்பாக ஆட்டத்தின் 18 வது ஓவரில் 12 சிக்சர்கள் விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய மில்லர் வேகமாக ரன்களை சேர்த்தார். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது.  

ஆட்டத்தின் கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. அடுத்து மில்லர் ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசி 59 ரன்களுடன் இருந்தார். சூப்பர் 12 சுற்றில் இந்தியா அணி பெரும் முதல் தோல்வி இதுவாகும். இந்தியா அணி அடுத்து பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாவே அணிகளுடன் மோத உள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget