FMCG பிராண்டுகளுக்கு வலுவான விற்பனை உயர்வை காட்டும் JIOSTAR ஆய்வு
மும்பை, ஜனவரி 12, 2025 – TATA IPL 2025 காலத்தில் விளம்பரங்கள் நுகர்வோர் வாங்கும் நடத்தையில் ஏற்படுத்திய தாக்கத்தை மதிப்பீடு செய்யும் ஒரு விரிவான ஆய்வின் முடிவுகளை JioStar இன்று அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 4,400-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகளிலிருந்து பெறப்பட்ட ஆஃப்லைன் விற்பனை தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வு, 15 FMCG பிரிவுகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பிராண்டுகளை உள்ளடக்கியது. இந்தியாவில் விளையாட்டு விளம்பரங்கள் உண்மையான வணிக முடிவுகளை உருவாக்கும் திறனை உறுதிப்படுத்தும் முக்கியமான ஆய்வுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆய்வை அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட Aintu Inc. மேற்கொண்டது.
FMCG பிராண்டுகளுக்கு வலுவான விற்பனை உயர்வை காட்டும் JIOSTAR ஆய்வு
இந்த ஆய்வு, TATA IPL 2025 காலத்தில் JioStar-ல் விளம்பரமிட்ட FMCG பிராண்டுகள் அனைத்துப் பிரிவுகளிலும், அளவு (volume) மற்றும் மதிப்பு (value) அடிப்படையிலான விற்பனையில் தொடர்ச்சியான உயர்வை கண்டன என்பதை வெளிப்படுத்துகிறது. சராசரியாக, FMCG பிராண்டுகள் 5.7% விற்பனை மதிப்பு உயர்வை பதிவு செய்தன. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களை இணைக்கும் cross-screen விளம்பரத் திட்டங்களை பயன்படுத்திய பிராண்டுகள் 6.3% உயர்வை பெற்றன; ஒரே தள விளம்பரங்கள் 5.3% உயர்வை மட்டுமே பதிவு செய்தன.
மேலும், அதிக விளம்பர முதலீடுகள் வலுவான முடிவுகளை அளித்தன. ₹10 கோடியைத் தாண்டி செலவிட்ட பிராண்டுகள் 8.4% விற்பனை உயர்வை கண்டன, இது குறைந்த செலவுகளுடன் விளம்பரமிட்ட பிராண்டுகளின் 4.9% உயர்வை விட இரட்டிப்பு அளவாகும். விளம்பர வடிவங்களும் முக்கிய பங்கு வகித்தன. வீடியோ + டிஸ்ப்ளே வடிவங்களை இணைத்து பயன்படுத்திய பிரச்சாரங்கள் 7.2% உயர்வை அளித்தன; வீடியோ மட்டும் பயன்படுத்திய பிரச்சாரங்கள் 5.5% உயர்வை பெற்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த JioStar நிறுவனத்தின் Sports Sales தலைவர் அனுப் கோவிந்தன்,
“விளையாட்டு நிகழ்வுகள் எப்போதும் பெரிய அளவில் பார்வையாளர்களை ஈர்க்கும் சக்தியைக் கொண்டிருந்தாலும், இன்றைய சூழலில் அதன் பங்கு வெறும் reach மற்றும் awareness-ஐத் தாண்டியுள்ளது. உண்மையான தாக்கத்தையும் அளவிடக்கூடிய வணிக முடிவுகளையும் உருவாக்குவதுதான் இன்றைய முக்கிய நோக்கம். TATA IPL 2025 காலத்தில் JioStar உடன் இணைந்த பிராண்டுகள் கோடிக்கணக்கான பார்வையாளர்களை எட்டியதோடு, அந்த ஈடுபாட்டை உண்மையான, அளவிடக்கூடிய விற்பனை உயர்வாக மாற்றியுள்ளன என்பதை இந்த ஆய்வு தெளிவாக காட்டுகிறது,” என்றார்.
Parle Products நிறுவனத்தின் துணைத் தலைவர் மயங்க் ஷா கூறுகையில்,
“IPL 2025, விளையாட்டு எவ்வளவு வலுவாக நுகர்வோரின் உணர்வுகளையும் நடத்தையையும் மாற்ற முடியும் என்பதை மீண்டும் நிரூபித்தது. Parle நிறுவனத்திற்கு, ரசிகர்கள் முழுமையாக ஈடுபட்டிருந்த சரியான தருணத்தில் அவர்களை அணுகும் வாய்ப்பை இது வழங்கியது. wafer-களிலிருந்து Marie வரை எங்கள் முக்கிய பிராண்டுகளில் வலுவான முன்னேற்றத்தை உருவாக்கியது. கலாச்சார உற்சாகத்தை உண்மையான விற்பனை மற்றும் பிராண்டு விருப்பமாக மாற்றிய ஒரு காலமாக இது அமைந்தது,” என்றார்.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த FMCG விளம்பரதாரர்களில் ஒருவரான Hamilton Sciences நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சௌரப் குப்தா,
“Denver-ல், உணர்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தருணங்களில் நுகர்வோரை இணைக்கும் விளையாட்டு விளம்பரத்தின் சக்தியை நாங்கள் எப்போதும் நம்பி வந்துள்ளோம். அதனால் தான் நாட்டின் மிகப்பெரிய மீடியா தளமான JioHotstar-ல் IPL போன்ற மிகப்பெரிய விளையாட்டு-வேடிக்கை நிகழ்வுடன் இணைந்தோம். முடிவுகள் தானாகவே பேசுகின்றன. இது வெறும் விளம்பரம் அல்ல – உண்மையான தாக்கம், ஆழமான இணைப்பு மற்றும் நடத்தை மாற்றத்தை உருவாக்கும் விளம்பரம். இதைவிட பெரியது எதுவும் இல்லை. 2026-ல் இந்த கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.
இந்தியாவின் மிகப் பெரிய கலாச்சார மேடைகளில் ஒன்றாக விளையாட்டு தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், இந்த ஆய்வு reach மட்டுமல்ல, ROI-யையும் எதிர்பார்க்கும் விளம்பரதாரர்களுக்கான முதன்மை தளமாக JioStar-ன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஒப்பற்ற அளவு, ஆழமான ஈடுபாடு மற்றும் வெளிப்படையான அளவீடுகளை இணைத்து, IPL போன்ற மாபெரும் நிகழ்வுகளிலும் அதற்கு அப்பாலும் பிராண்டுகள் அர்த்தமுள்ள வளர்ச்சியை அடைய JioStar சக்தியளிக்கிறது.





















