Virat Kohli Catch : அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பிய படிக்கல்..! கையை பிடித்து மீண்டும் அழைத்து வந்த அம்பயர்..! நடந்தது என்ன?
Virat Catch : ராஜஸ்தான் வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு விராட்கோலி பிடித்த கேட்ச் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் 4 ரன்களில் போல்டான பிறகு களமிறங்கிய தேவ்தத் படிக்கல் ஜோஸ் பட்லருடன் இணைந்து சிறப்பாக ஆடினார். பவர்ப்ளேவிற்கு பிறகு பவுண்டரி, சிக்ஸர் என்று அதிரடிக்கு மாறிய தேவ்தத் படிக்கல் 10 ஓவரின் கடைசி பந்தில் ஹர்ஷல் படேல் வீசிய பந்தில் மிகவும் உயரத்திற்கு கேட்ச் வாய்ப்பு ஒன்றை அளித்தார்.
அந்த கடினமான கேட்ச்சை பெங்களூர் முன்னாள் கேப்டன் விராட்கோலி அற்புதமாக பிடித்தார். தேவ்தத் படிக்கல்லும் அவுட்டாகிய பிறகு பெவிலியன் திரும்பினார். அடுத்த பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனும் பேட்டுடன் மைதானத்திற்குள் வந்தார். அப்போது, மூன்றாவது அம்பயர் பெவிலியனுக்கு வந்த தேவ்தத் படிக்கல்லின் கையை பிடித்து மைதானத்திற்குள் மீண்டும் அழைத்து வந்தார்.
இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், விராட்கோலி கேட்ச் பிடித்த பிறகு பந்தை தரையில் வைத்தாரா? இல்லையா? என்று ரிவியூவில் பார்க்கப்பட்டது. ரிவியூவில் விராட்கோலி பந்தை பிடித்தபிறகு தரையில் வைக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து, படிக்கல்லின் அவுட் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தேவ்தத் படிக்கல் மீண்டும் பெவிலியனுக்கு திரும்பினார். படிக்கல் 29 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்