IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல்‘’ராஜா’’! விராட் கோலி செய்த புது சாதனை! முழு விவரம் உள்ளே!
ஐ.பி.எல் போட்டியின் 10 சீசன்களில் 400-க்கும் அதிகமான ரன்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார் விராட் கோலி.

ஐ.பி.எல் சீசன் 17:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. இந்த சீசனில் இதுவரை 40 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 25) 41 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன.
கோலியின் சாதனை:
இந்நிலையில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். அதாவது இதுவரை நடைபெற்ற 17 ஐ.பி.எல் சீசன்களில் 10 சீசன்களில் 400 க்கும் அதிக ரன்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையைத் தான் கிங் கோலி படைத்து இருக்கிறார்.
2016 ஆம் ஆண்டில் ருத்ரதாண்டவம்:
அந்தவகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 அரைசதங்கள் உட்பட 557 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 634 ரன்களை குவித்திருக்கிறார். 2015 ஆம் ஆண்டு 505 ரன்களும், 2016 ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 சதங்கள் மற்றும் 7 சதங்கள் உட்பட 973 ரன்களை குவித்து அசத்தி இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகள் விளையாடிய விராட் 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 530 ரன்கள் எடுத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 464 ரன்களும், 2020 ஆம் ஆண்டு 466 ரன்களையும் எடுத்திருக்கிறார் விராட் கோலி. அதேபோல், 2021 ஆம் ஆண்டில் 15 போட்டிகள் விளையாடிய அவர் 3 அரைசதங்கள் உட்பட மொத்தம் 405 ரன்களும், கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 639 ரன்களை குவித்து மாஸ் காட்டி இருக்கிறார் விராட் கோலி.
VIRAT KOHLI BECOMES THE 1ST PLAYER IN IPL HISTORY TO SCORE 400 RUNS IN A SEASON 10 TIMES. 🤯🐐 pic.twitter.com/I8XJ2DI4oR
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 25, 2024
இச்சூழலில் தான் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல்லின் 17 வது சீசனில் 400 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். இவ்வாறாக இதுவரை நடைபெற்ற 17 சீசன்களில் சுமார் 10 சீசனில் 400க்கும் அதிகமான ரன்கள எடுத்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. ஐ.பி.எல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள நிலையில் தற்போது இந்த சாதனையையும் தன்வசப்படுத்தி இருக்கிறார் விராட் கோலி.
மேலும் படிக்க: IPL 2024: இந்தியன் ப்ரீமியர் லீக்கா? ஆஸ்திரேலியன் ட்ரெயினிங் லீக்கா? பொளந்து கட்டும் கங்காரு பாய்ஸ்!
மேலும் படிக்க: Ruturaj Gaikwad: லியோ படம் பார்த்த CSK கேப்டன் ருதுராஜ்! செம குஷியில் விஜய் ரசிகர்கள்!



















