‛எங்களுக்கு கிடைத்த ரசிகர்கள் இருக்காங்களே...’ நெகிழ்ந்து பேசிய தோனி!
நல்ல பெர்ஃபாமென்ஸ் அல்லது மோசமான பெர்ஃபாமென்ஸ் என்று வரும்போது நாங்கள் அதிகம் சொல்லத் தேவையில்லை, ரசிகர்கள் அதை கவனித்துள்ளனர்.
சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து பெருமைப்படுகிறோம் என்று கூறிய சென்னை அணியின் கேப்டன் தோனி, அதே நேரத்தில் அவர்கள் தாழ்மையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
2021 ஐபிஎல் சீசனின் இரண்டாம் பாதி போட்டிகளில், ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடைசி ஓவரில் போட்டியை முடித்து ப்ளே ஆஃப் சீட்டை உறுதி செய்துள்ளது. இந்த சீசனில், ப்ளே ஆஃப் செல்வதை உறுதி செய்த முதல் அணியாகவும் சென்னை அசத்தியுள்ளது.
போட்டிக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேசியபோது, சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த பேசிய தோனி, “ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக இருந்தனர். நல்ல பெர்ஃபாமென்ஸ் அல்லது மோசமான பெர்ஃபாமென்ஸ் என்று வரும்போது நாங்கள் அதிகம் சொல்லத் தேவையில்லை, ரசிகர்கள் அதை கவனித்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். எங்களுக்கு கிடைத்த ரசிகர்களைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று சிஎஸ்கே சார்பாக நான் பெருமையுடன் சொல்ல முடியும். ஆனால் இது ஒரு கட்டம் என்பதால், அவர்கள் எப்பொழுதும் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் அந்த அணி என்ன செய்கிறது, அணியின் ரசிகனாக நான் உணர்கிறேன். அவர்களும் அதையே செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொருவரின் பார்வையையும் மதிக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று பேசினார்.
Urs Anbuden,
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 30, 2021
THA7⃣A#WhistlePodu #Yellove https://t.co/hgJjviUqoB
Thala Thala dhan 💛➡️💛#WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/BrI0Ixbn33
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 1, 2021
கடைசியில், 3 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார் கேப்டன் தோனி. சிக்சர் அடித்த பினிஷிங் செய்த தோனியை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்தாக ரசிகர்கள் கூறினர்.
முன்னதாக, முதல் இன்னிங்ஸின்போது 3 கேட்சுகளைப் பிடித்தார் தோனி. இதன் மூலம், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக 100 கேட்சுகளை எடுத்து நிறைவு செய்தார் தோனி. தனது கிரிக்கெட் கரியரில், ஐபிஎல்லில் மேலும் ஒரு புதிய மைல்கல்லை எட்டினார்.
Special cricketer, special milestone! 👏 👏@msdhoni completes 1⃣0⃣0⃣ IPL catches for @ChennaiIPL as a wicketkeeper. 🙌 🙌 #VIVOIPL #SRHvCSK
— IndianPremierLeague (@IPL) September 30, 2021
Follow the match 👉 https://t.co/QPrhO4XNVr pic.twitter.com/OebX4cuJHq