மேலும் அறிய

RR vs CSK: கடைசி ஓவர்களில் என்றுமே நான் ராஜா.. தொடரும் தோனியின் மிரட்டல் ரெக்கார்ட்ஸ்..!

பந்து வீச்சாளர்களில் கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட்கள் இருக்கும்போது, கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக முதன்முறையாக வந்த பேட்ஸ்மேன் இவர்தான். அதனை இன்றும் செய்த அவர் கடைசி ஓவரில் மட்டுமே செய்த சாதனையும் பெரிது.

இந்த வாரத் தொடக்கத்தில் ஆரம்பித்த இந்த த்ரில்லர் கலாச்சாரம், தொடர்ந்து நான்காவது போட்டியாக இன்றைய போட்டியிலும் தொடர்ந்தது ஆச்சர்யமில்லை. நேற்றைய போட்டியில் தோனியின் ஷாட்கள் சென்னை மக்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. கடைசி பந்தை சந்தீப் ஷர்மா கச்சிதமான யார்க்கராக வீச தோனியால் அதனை பவுண்டரிக்கு வெளியே விரட்டுவது இயலாத காரியமாக மாற, சென்னை அணி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். போட்டியை காண ஆவலோடு வந்து கூடிய சென்னை மக்கள் சிஎஸ்கே வெற்றி பெறாததில் வருத்தமடைந்திருந்தாலும் தோனியின் அதிரடியை கண்டத்தில் ஓரளவுக்கு நிம்மதியாக வீட்டிற்கு சென்றிருப்பார்கள்.

RR vs CSK: கடைசி ஓவர்களில் என்றுமே நான் ராஜா.. தொடரும் தோனியின் மிரட்டல் ரெக்கார்ட்ஸ்..!

தோனி செய்த மாயம்

கிட்டத்தட்ட 3 ஓவர்களுக்கு 53 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இருந்து கடைசி மூன்று பந்தில் 7 ரன் என்று பார்ப்பதற்கு எளிதாக மாற்றி வைத்தபோது, பழைய தோனி முழுமையாக வந்திறங்கிய மகிழ்ச்சி அனைவருக்குமே இருந்திருக்கும். பழைய தோனி என்பவர் ஆட்டம் எந்த சூழலில் இருந்தாலும் அதனை கடைசி பந்து வரை கொண்டு செல்வார். பொதுவாகவே கடைசி ஓவர்களில் வந்து இறங்கி அதிரடி காட்டும் அவருக்கு செட் ஆவதற்கெல்லாம் நேரம் கிடையாது. வந்த முதல் பந்தே அடிக்கும் திறன் பெற்றிருப்பதால்தான் தொடர்ச்சியாக இத்தனை வருடம் இந்த பொசிஷனில் விளையாட முடிந்திருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்: விஜய்யின் மாஸ்டர் பிளான் என்ன? அம்பேத்கர் சிலைக்கு மாலை.. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை.. பரபரப்பாகும் அரசியல் களம்..!

கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட்

பழமை மாறாமல், அதே புத்துணர்ச்சியுடன், அதே தெளிவுடன் இன்றும் ஆடுகிறார் என்பதை தமிழ் மக்கள் கண்கூடாக கண்டுவிட்டது பலருக்கு பிறவி பலனை தீர்த்திருக்கும். பந்து வீச்சாளர்களில் கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட்கள் இருக்கும்போது, கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக முதன்முறையாக வந்த பேட்ஸ்மேன் இவர்தான். அதனை இன்றும் செய்த அவர் கடைசி ஓவரில் மட்டுமே செய்த சாதனையும் பெரிது. அதாவது ஐபிஎல் போட்டிகளில் ஆட்டத்தின் 20வது ஓவரில் அவர் இதுவரை சந்தித்த பந்துகள் 282. அதில் 57 சிக்ஸர்களும், 49 பவுண்டரிகளும் அடித்திருக்கிறார் என்பது யாராலும் அசைக்க முடியாத சாதனை. அத்தனை சிக்ஸர்களும், பவுண்டரிகளும் முக்கியமான போட்டியின் வெற்றி ரன்கள் என்பதால்தான் இது இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது. அவருக்கு பின் போலார்டு (33), ஜடேஜா (26), பாண்டியா (25), ரோஹித் ஷர்மா (23) போன்ற ஃபினிஷர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேப்பாக்கத்தில் தோனியின் கடைசி 6 போட்டிகள்

இப்போதெல்லாம் இம்பாக்ட் பிளேயர் விதி வந்துவிட்டதால் நம்பர் 7இல் இறங்கிக்கொண்டிருந்த தோனி, நம்பர் 8-இல் இறங்கத்துவங்கியது ரசிகர்களுக்கு பெரும் வருத்தமாக அமைந்தாலும் இதுவரை ரசிகர்களுக்கு தீனி போடும்படியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சென்னையில் மக்கள் மனம் குளிர சிக்ஸர்களை அடித்து குவிக்கிறார். சென்னை சேப்பாக்கத்தில் அவர் கடைசியாக ஆடிய ஆறு போட்டிகளிலும் அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ராஜஸ்தான் என்றால் காலில் சலங்கை கட்டி வருகிறார் தோனி. 

75*(46) vs RR 

37*(23) vs PBKS 

44*(22) vs DC 

37*(29) vs MI 

12(3) vs LSG 

32*(17) vs RR

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
Latest Gold Silver Rate: வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.120 அதிகரிப்பு..
வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.120 அதிகரிப்பு..
Breaking News LIVE: தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை; அதிமுக ஆட்சியிலும் இப்படிதான்: இபிஎஸ் 
Breaking News LIVE: தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை; அதிமுக ஆட்சியிலும் இப்படிதான்: இபிஎஸ் 
TN Weather Update: மே 1 - 4 ஆம் தேதி வரை அதிகப்படியான வெப்ப அலை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த ரிப்போர்ட்..
மே 1 - 4 ஆம் தேதி வரை அதிகப்படியான வெப்ப அலை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த ரிப்போர்ட்..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KS Ravikumar | ‘’கில்லி ஏன் ஹிட் ஆச்சுனா? படையப்பா ரீ-ரிலீஸ்?’’ KS ரவிக்குமார் OPENS UPRahul gandhi Chombu campaign  : சொம்பை தூக்கிய ராகுல்! ஆத்திரத்தில் பாஜக! கர்நாடக காங்கிரஸ் பரபரAyyakannu pressmeet : ”1000 பேரு ரெடி! மோடிக்கு செக்” அய்யாக்கண்ணு அதிரடிDMK Councillor arrest :  பெண் VAO-ஐ தாக்கிய திமுக கவுன்சிலர் கைது! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
Latest Gold Silver Rate: வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.120 அதிகரிப்பு..
வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.120 அதிகரிப்பு..
Breaking News LIVE: தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை; அதிமுக ஆட்சியிலும் இப்படிதான்: இபிஎஸ் 
Breaking News LIVE: தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை; அதிமுக ஆட்சியிலும் இப்படிதான்: இபிஎஸ் 
TN Weather Update: மே 1 - 4 ஆம் தேதி வரை அதிகப்படியான வெப்ப அலை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த ரிப்போர்ட்..
மே 1 - 4 ஆம் தேதி வரை அதிகப்படியான வெப்ப அலை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த ரிப்போர்ட்..
அச்சச்சோ! வாம்பயர் ஃபேஷியல் செய்த பெண்களுக்கு எச்.ஐ.வி: அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
அச்சச்சோ! வாம்பயர் ஃபேஷியல் செய்த பெண்களுக்கு எச்.ஐ.வி: அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தானை பழிவாங்குமா லக்னோ? இன்று இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை
RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தானை பழிவாங்குமா லக்னோ? இன்று இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை
"முதலாளிகள் கடன்தான் தள்ளுபடி! விவசாயிகளின் கடன் அல்ல" - மோடியை விளாசிய கர்நாடக முதலமைச்சர்
சோகம்! மணிப்பூரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை - நள்ளிரவில் நடந்தது என்ன?
சோகம்! மணிப்பூரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை - நள்ளிரவில் நடந்தது என்ன?
Embed widget