PBKS vs RCB,IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் பெங்களூருவை வெச்சு செய்துள்ள பஞ்சாப்.. தொடருமா கிங்ஸ் வேட்டை?
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை எதிர்கொண்ட போட்டிகளின் முடிவுகள் மற்றும் அதுதொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை எதிர்கொண்ட போட்டிகளின் முடிவுகள் மற்றும் அதுதொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
பஞ்சாப் - பெங்களூரு மோதல்:
ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை, டூப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது. மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஜியோ சினிமா தொலைக்காட்சி வாயிலாகவும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். முன்னதாக, இரு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளின் விவரங்களை இங்கு அறியலாம்.
நேருக்கு நேர்:
கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள், இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இவ்விரு அணிகளும் எதிர்கொண்ட 5 போட்டிகளில் நான்கில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் மைதானத்தில் பஞ்சாப்:
மொஹாலி மைதானத்தில் இதுவரை 62 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 35ல் வெற்றியும், 27ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதேநேரம், இதுவரை இந்த மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி நான்கில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விவரங்கள்:
பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 226
பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 232
பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 84
பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 88
தனிநபர் சாதனைகள்:
பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த பெங்களூரு அணி வீரர் - விராட் கோலி, 802
பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி வீரர் - தவான், 64
பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த பெங்களூரு அணி வீரர் - ஹர்ஷல் படேல், 11
பெங்களூரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த பஞ்சாப் அணி வீரர் - ரிஷி தவான், 4
பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக கேட்ச் பிடித்த பெங்களூரு அணி வீரர் - விராட் கோலி, 11
பெங்களூரு அணிக்கு எதிராக அதிக கேட்ச் பிடித்த பஞ்சாப் அணி வீரர் - ஷிகர் தவான், 2
நடப்பு தொடரில் இதுவரை:
நடப்பு தொடரில் இதுவரை தலா 5 போட்டிகளில் விளையாடி பஞ்சாப் அணி 3 வெற்றிகளையும், பெங்களூரு அணி 2 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 5வது இடத்திலும், பெங்களூரு அணி 8வது இடத்திலும் உள்ளது.