IPL Points Table: கெத்தா முதலிடத்திற்கு சென்ற சென்னை...! அப்போ மற்ற அணிகள் புள்ளிப்பட்டியலில் எந்த இடம்?
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் வெற்றி மூலம் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா – சென்னை சூப்பர்கிங்ஸ் அணி புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் கெய்க்வாட், கான்வே, ரஹானே, துபே, ஜடேஜா ஆகியோர் அதிரடியால் சென்னை அணி முதலில் பேட் செய்து 235 ரன்கள் குவித்தது.
சென்னை அபார வெற்றி:
இமாலய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியின் வீரர்கள் ஜெகதீசன், சுனில் நரைன், வெங்கடேஷ் அய்யர் சொதப்பினாலும் ஜேசன் ராய், ரிங்குசிங் அதிரடியில் மிரட்டினர். இருப்பினும், அவர்கள் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம்:
இந்த போட்டிக்கு பிறகான புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் தலா 1 இடம் கீழ் இறங்கியுள்ளது. சென்னை அணி தற்போது 7 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகள் 2 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்னை முன்னேறியிருப்பது சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றது பெங்களூர் அணிக்கு புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் இனி வரும் நாட்களில் பெறும் வெற்றிகள் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் நுழைய உதவும் என்று கூறலாம்.
புள்ளிப்பட்டியல் முழு விவரம்:
- சென்னை - 5 வெற்றி 2 தோல்வி - 10 புள்ளிகள்
- ராஜஸ்தான் - 4 வெற்றி 3 தோல்வி - 8 புள்ளிகள்
- லக்னோ - 4 வெற்றி 3 தோல்வி - 8 புள்ளிகள்
- குஜராத் - 4 வெற்றி 2 தோல்வி - 8 புள்ளிகள்
- பெங்களூர் - 4 வெற்றி 3 தோல்வி - 8 புள்ளிகள்
- பஞ்சாப் - 4 வெற்றி 3 தோல்வி - 8 புள்ளிகள்
- மும்பை - 3 வெற்றி 3 தோல்வி - 6 புள்ளிகள்
- கொல்கத்தா - 2 வெற்றி 5 தோல்வி - 4 புள்ளிகள்
- ஹைதரபாத் - 2 வெற்றி 4 தோல்வி - 4 புள்ளிகள்
- டெல்லி - 1 வெற்றி 5 தோல்வி - 2 புள்ளிகள்
ரன்ரேட்:
ராஜஸ்தான், லக்னோ, குஜராத், பெங்களூர், பஞ்சாப் அணிகள் 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் தரவரிசை இடங்கள் மாறி வருகின்றன. முன்னாள் சாம்பியன் மும்பை அணி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல். தொடர் தற்போது பாதியளவு கட்டத்தை எட்டியுள்ளதால் இனி வரும் ஆட்டங்களில் டாப் 4க்குள் இடம் பெற வேண்டுமென்றால் கட்டாயம் வெற்றி பெற வேண்டியது அனைத்து அணிகளுக்கும் அவசியம் ஆகும். ஏனென்றால், சம வெற்றியை பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் வெளியேறும் அபாயமும் உள்ளது.
தற்போதைய புள்ளிப்பட்டியலில் சென்னை, ராஜஸ்தான், லக்னோ, குஜராத் அணிகள் மட்டுமே பிளஸ் ரன்ரேட்டை வைத்துள்ளனர். மற்ற அணிகள் மைனஸ் நிலையிலே ரன்ரேட்டை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க: KKR vs CSK, IPL 2023 Highlights: சரணடைந்த கொல்கத்தா.. 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி .. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!
மேலும் படிக்க: RCB vs RR, IPL 2023 Highlights: இம்பேக்ட் ப்ளேயரால் இடிந்து போன ராஜஸ்தான்; 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி.!