Watch Video: முஸ்தஃபா முஸ்தஃபா காலம் நம் தோழன்...- சிஎஸ்கே பதிவிட்டுள்ள பிராவோ-ராயுடு வீடியோ !
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் சென்னை அணி மீண்டும் பிராவோ மற்றும் ராயுடுவை ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் மெகா வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று முதல்நாள் ஏலம் நடைபெற்றது. அதில் 161 வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கும், தீபக் சாஹர் 14 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அவர் தவிர மற்ற சில வீரர்களும் அதிக விலைக்கு எடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரண்டாவது நாள் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று ஏலத்தில் பிராவோ மற்றும் அம்பாத்தி ராயுடுவை மீண்டும் அணியில் எடுத்தது. இதை கொண்டாடும் வகையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முஸ்தஃபா, முஸ்தஃபா பாடலை போட்டு பிராவோ மற்றும் ராயுடு ஒன்றாக உள்ள தருணங்களை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் பார்த்து வேகமாக வைரலாக்கி வருகின்றனர்.
Mustafa Mustafa 🎶 vibes back at the Den! 💛#SuperAuction #WhistlePodu 🦁 @RayuduAmbati @DJBravo47 pic.twitter.com/bcPMJrKKnl
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) February 13, 2022
முதல் நாள் ஏலத்தில் சென்னை அணி தீபக் சாஹர்(14 கோடி ரூபாய்), ராபின் உத்தப்பா(2 கோடி ரூபாய்), பிராவோ(4.4 கோடி ரூபாய்), அம்பாத்தி ராயுடு(6.75 கோடி ரூபாய்) உள்ளிட்ட முன்னணி வீரர்களை எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியிடம் தற்போது 20.45 கோடி ரூபாய் தொகை மீதம் உள்ளது.
Also Read | IPL 2022 Auction CSK: நேற்று சிஎஸ்கே தேர்ந்தெடுத்த வீரர்கள் யார் யார்?- இன்று ஏலத்தில் அசத்துமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: சின்ன தல சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே ஓரம் கட்ட இதுதான் காரணமா?