IPL Team Owners: "CSK முதல் RCB வரை" 10 அணிகளுக்கும் ஓனர் யாரு தெரியுமா? இதைப் படிங்க!
IPL Team Owner: ஐ.பி.எல். தொடரில் ஆடும் 10 அணிகளின் உரிமையாளர்களும் யார்? யார்? என்று கீழே விரிவாக காணலாம்.
ஐ.பி.எல் 2025ம் ஆண்டுக்கான ஏலம் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்று தங்களுக்குத் தேவையான வீரர்களை எடுத்துள்ளது.
இந்த நிலையில், ஒவ்வொரு அணிக்கும் யார் உரிமையாளர்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஐ.பி.எல். தொடரில் 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் உரிமையாளராக திகழ்ந்து வருகிறது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு இந்தியா சிமெண்ட்ஸ் இருந்து சி.எஸ்.கே.விற்கு என்றே தனியாக குழுமம் உருவாக்கப்பட்டு சி.எஸ்.கே அணி செயல்பட்டு வருகிறது. உரிமையாளராக சீனிவாசன் திகழ்கிறார்.
பயிற்சியாளர் : ஸ்டீபன் ப்ளெமிங்
மைதானம் : சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானம்
டெல்லி கேபிடல்ஸ்:
ஐ.பி.எல். தொடரில் ஆரம்ப காலம் முதல் ஆடி வரும் டெல்லி அணி முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் ஆடியது. தற்போது டெல்லி கேபிடல்ஸ் என்ற பெயரில் ஆடி வருகிறது. டெல்லி அணிக்கு ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜேஎஸ்டபுள்யூ ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உரிமையாளராக உள்ளது. ஜி.எம்.ஆர். குழும தலைவராக கிராந்தி மல்லிகார்ஜூன ராவின் இளைய மகன் கிரண்குமார் கிராந்தியே டெல்லி அணி நிர்வாகத்தை கண்காணிக்கிறார்.
பயிற்சியாளர் : ஹேமங் பதானி
மைதானம் : அருண் ஜெட்லி மைதானம் ( டெல்லி)
குஜராத் டைட்டன்ஸ்:
களமிறங்கி முதல் தொடரிலே பட்டத்தை வென்ற குஜராத் அணி சிவிசி கேபிடல் பார்ட்னர்சிற்கு சொந்தம் ஆகும். 1981ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக ராப் லூகாஸ் திகழ்கிறார்.
பயிற்சியாளர் : ஆஷிஷ் நெஹ்ரா
இடம் : நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
2012, 2014 மற்றும் 2024ம் ஆண்டு மகுடம் சூட்டிய கொல்கத்தா அணி நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டிற்கு சொந்தமானது ஆகும். கொல்கத்தா அணி ஷாருக்கானுக்கு சொந்தமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகும். பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் உள்ளார்.
பயிற்சியாளர் : சந்திரகாந்த் பண்டிட்
மைதானம் : கொல்கத்தா ஈடன் கார்டன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
குஜராத் அணியுடன் புதிய அணியாக ஐபிஎல் தொடரில் அறிமுகமான அணி எல்.எஸ்.ஜி. இந்த அணி ஆர்.பி.எஸ்.ஜி. குழுமத்திற்கு சொந்தமானது ஆகும். இதன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா.
பயிற்சியாளர்: ஜஸ்டின் லாங்கர்
மைதானம் : லக்னோ ஸ்டேடியம்
மும்பை இந்தியன்ஸ்:
ஐ.பி.எல். தொடரின் தவிர்க்க முடியாத அணியும் 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டிற்கு கீழ் இந்த அணி செயல்பட்டு வருகிறது. ரசிகர்கள் அனைவருக்கும் இந்த அணி உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானிக்கு சொந்தமான அணி என்பது தெரியும்.
பயிற்சியாளர் : மஹேலா ஜெயவர்தனே
மைதானம் : வான்கடே மைதானம்
பஞ்சாப் கிங்ஸ்:
ஐபிஎல் தொடங்கிய காலம் முதலே ஆடி வரும் அணி பஞ்சாப், ஒரு முறை கூட கோப்பை வெல்லாத பஞ்சாப் அணி கேபிஎச் ட்ரீம் கிரிக்கெட் ப்ரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனத்திற்கு பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா மட்டுமின்றி நெஸ்வாடியா, மோகித் பர்மன், கரண் பால், சதீஷ் ராமன் மேனன் ஆகியோரும் உரிமையாளர்கள் ஆவார்கள்.
பயிற்சியாளர் : ரிக்கி பாண்டிங்
மைதானம் : சண்டிகரில் உள்ள முல்லன்பூர் பிசிஏ ஸ்டேடியம்
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஐ.பி.எல். தொடரின் முதல் பட்டத்தை கைப்பற்றிய பெருமைக்கு சொந்தமான அணி ராஜஸ்தான் ராயல்ஸ். 2008ம் ஆண்டு கோப்பையை வென்ற பிறகு ஒரு முறை கூட கோப்பையை வெல்லாததை மாற்ற ராஜஸ்தானும் முயற்சித்து வருகின்றனர். இந்த அணியை நிர்வகித்து வருவது தி ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குரூப். இதன் உரிமையாளர் மனோஜ் படாலே. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரில் இவரும் ஒருவர்.
பயிற்சியாளர்: ராகுல் டிராவிட்
மைதானம் : ஜெய்ப்பூர், சாவாய் மன்சிங் ஸ்டேடியம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஒரு முறை கூட கோப்பையை வெல்லாவிட்டால் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அணி ஆர்.சி.பி. விராட் கோலி ஆடும் இந்த அணி யூனிடைட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்டிற்கு சொந்தமானது. இது இந்தியாவின் பிரபலமான மது உற்பத்தி நிறுவனம்.
பயிற்சியாளர் : ஆண்டி ப்ளவர்
இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூர்
சன்ரைசர்ஸ் ஹைதரபாத்:
2016ம் ஆண்டு பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி சன் குழுமத்திற்கு சொந்தமான அணியாகும். தமிழ்நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் இந்த அணியை நிர்வகித்து வருகிறார்.
பயிற்சியாளர் : டேனியல் வெட்டோரி
மைதானம் : ஹைதரபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியம்