IPL 2025 Unsold Players: இவர்களுக்கே இந்த நிலைமையா? சீண்டாத அணிகள்.. ஏலத்தில் விற்கப்படாத டாப் ஐந்து வீரர்கள்
IPL 2025 Unsold Players : ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத டாப் 5 வீரர்களை யார் என்பதை இந்த தொகுப்பில் காண்போம்
ஐபிஎல் 2025 ஏலம் கடந்த இரண்டு நாட்களாக நடந்த நிலையில் டேவிட் வார்னர், வில்லியம்சன் போன்ற முக்கிய வீரர்கள் எந்த அணியும் எடுக்காமல் போனது அதிர்ச்சியளத்துள்ளது. இந்த முறை எல்லா அணிகளும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெரும்பாலும் இளம் வீரர்களையே ஏலத்தில் எடுத்தது. அந்த ஏலத்தில் விலை போகாத டாப் 5 வீரர்களை இந்த தொகுப்பில் காண்போம்
ஐபிஎல் 2025 ஏலம்:
ஐபிஎல் 205 ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இந்த ஏலத்திற்காக மொத்தம் 1574 வீரர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் மொத்தம் 577 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் 283 வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் பங்கேற்க எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் முதல் நாள் ஏலத்தில் ஐபிஎல் அணிகள் கோடிகளை கொட்டித்தீர்த்தது இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். அவருக்கு அடுத்தப்படியாக ஸ்ரேயஸ் ஐயரை பஞ்சாப் அணி 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இரண்டாம் நாள் ஏலத்தில் பல அணிகளிடம் குறைவான தொகை மட்டுமே இருந்ததால் பல வீரர்களின் அடிப்படை விலை அதிகமாக இருந்தால் பல அணிகள் வீரர்களை எடுக்க தயக்கம் காட்டினர்.
ஏலம் போகாத வீரர்கள்:
டேவிட் வார்னர்: இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர் தனது அடிப்படை விலையாக 2 கோடியை நிர்ணயித்திருந்தார். ஆனால் அவரை ஏலத்தில் இறுதிவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. வார்னர் டெல்லி அணிக்காக அறிமுகமாகி பின்னர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு 2016 ஆண்டில் ஐபிஎல் கோப்பையும் வாங்கிக்கொடுத்தார். அதன் பிறகு அணியில் ஏற்ப்பட்ட சின்ன மனகசப்பு காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2023, 2024 சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடினாலும் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.
கேன் வில்லியம்சன்: நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் 2015-2022 சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். இதில் 2018 ஆம் ஆண்டில் ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டிக்கு வரை அழைத்துச் சென்றார். அதன் பின்னர் 2023 ஐபிஎல் ஏலத்தில் குஜராத் அணியால் வாங்கப்பட்டார். ஆனால் காயம் காரணமாக 2023 சீசனில் இருந்து விலகிய நிலையில் 2024ஆம் சீசனில் ஒரு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இந்த மெகா ஏலத்தில் அடிப்படை விலையாக வில்லியம்சன் 2 கோடி நிர்ணயத்திருந்த நிலையில் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.
ஷர்துல் தாக்கூர்: சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வந்த ஷர்துல் தாக்கூரும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. 2 கோடியை அவர் அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த நிலையில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு சீசனில் சென்னை அணி கோப்பையை வெல்ல இறுதிப்போட்டியில் ஷர்துல் தாக்கூர் முக்கிய காரணமாக இருந்தார்.
இதையும் படிங்க: Gurjapneet Singh: பஞ்சாப் டூ சென்னை! ஸ்டம்புகளை சிதற வைக்கும் யார்க்கர் மன்னன்.. யார் இந்த குர்ஜப்னீத் சிங்?
ஜானி பேர்ஸ்டோ: இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோ தனது அடிப்படை விலையாக் 2 கோடி நிர்ணயத்திருந்தார். கடந்த சீசன்களில் சரியாக விளையாடத நிலையில் ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை
ப்ரித்வி ஷா: சச்சின் மற்றும் சேவாக்கின் கலவை என்று பெரிதும் பேசப்பட்ட இந்திய வீரர் ப்ரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த முறை ஏலத்தில் தனது அடிப்படை விலையையும் 75 லட்சத்துக்கு vஅவர் குறைத்த போதிலும் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. கடந்த முறை டெல்லி அணிக்காக அவர் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.