CSK Vs LSG: மும்பை கூட ஜெயிச்சுருச்சு..! தோனி மேஜிக் பலிக்குமா? சிஎஸ்கேவிற்கு கம்பேக்? லக்னோவை வீழ்த்துமா?
IPL 2025 CSK Vs LSG: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன.

IPL 2025 CSK Vs LSG: தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்விகண்டுள்ள நிலையில், சென்னை அணி இன்றாவது வெற்றி பெறுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை Vs லக்னோ:
நடப்பாண்டிற்கான ஐபிஎல் லீக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது. ஆனாலும், 5 முறை சாம்பியன்களான மும்பை மற்றும் சென்னை அணிகள் வெற்றிகளை குவிக்க முடியாமல் தடுமாறி வருகின்றன. டெல்லிக்கு எதிரானநேற்றைய போட்டியில் வெற்றி கண்டதன் மூலம், தற்போது தான் மும்பை அணி தனது இரண்டாவது வெற்றியையே பதிவு செய்துள்ளது. அதேநேரம், சென்னை அணியோ தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும், அதற்கு அடுத்து விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 7.30 மணிக்கு ஏக்னா மைதானத்தில் தொடங்கும் போட்டியில், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள லக்னோ அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது.
6வது தோல்வியை தவிர்க்குமா சிஎஸ்கே?
லக்னோ அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி வருகிறது. குறிப்பாக நிகோலஸ் பூரான் சிக்சர் மழையை பொழிந்து வருகிறார். ஆனால், சென்னை அணி மோசமான பேட்டிங் ஆர்டர் காரணமாக, இதுவரை இல்லாத வகையில் வரலாற்றிலேயே முதல்முறையாக 5 தோல்விகளை சந்தித்துள்ளது. தோனி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது. இருப்பினும் இன்றைய போட்டியில் சென்னை பிளேயிங் லெவனில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல இளம் வீரர்கள களமிறங்கக் கூடும். இதன் மூலம் சென்னை அணி தனது ஆறாவது தோல்வியை தவிர்த்து, தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்க, லக்னோ 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
ஏக்னா மைதானம் எப்படி?
லக்னோவின் ஏக்னா கிரிக்கெட் மைதானம் இதுவரை 17 ஐபிஎல் போட்டிகளை நடத்தியது. முதலில் பேட்டிங் செய்த அணிகள் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன, அதே போல் சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. ஏக்னா மைதானம் பொதுவாக பேட்டர்களுக்கு கடினமான மைதானமாக அறியப்படுகிறது. இருப்பினும், இந்த சீசனில், பந்து வீச்சாளர்களுக்கு மேற்பரப்பில் இருந்து அதிக உதவி கிடைக்கவில்லை. டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச விரும்புகின்றனர்.
உத்தேச பிளேயிங் லெவன்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG): ரிஷப் பண்ட் (c/wk) , ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஹிம்மத் சிங், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப்.
இம்பேக்ட் பிளேயர்: திக்வேஷ் ரதி
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், எம்எஸ் தோனி (c/wk), நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது.
இம்பேக்ட் பிளேயர்: மதீஷ பத்திரன




















