மேலும் அறிய

CSK vs KKR: பரபரப்பான கட்டம்.. தோனி அடித்த அந்த சிக்ஸர்.. ஒருவழியாக கரையேறிய மஞ்சள் படை

நடப்பு ஐபிஎல் சீசன், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தியது. இதில், சென்னை வெற்றி பெற்றுள்ளது.

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று, தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த சீசனில் சென்னை அணி பெறும் 3ஆவது வெற்றி இதுவாகும். ஏற்கனவே, பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சென்னை அணி இழந்துவிட்டது. இருப்பினும், இது ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: 

நடப்பு ஐபிஎல் சீசன், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் அஜின்கியா ரகானே, முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, களத்தில் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன், சொற்ப ரன்களுக்கு தங்களின் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல, அங்கிரிஷ் ரகுவன்ஷி 1 ரன்னுக்கு அவுட்டானார்.

பிளே ஆப் கனவை கிட்டத்தட்ட இழந்த கொல்கத்தா: 

இருப்பினும், கேப்டன் ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளுக்கு 48 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த மனீஷ் பாண்டே, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 38 ரன்கள் எடுத்திருந்தபோது, ரசல் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 179 ரன்களை எடுத்தது. இதனால், 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஆயுஷ் மாத்ரே, டேவன் கான்வே ஆகிய இரண்டு தொடக்க வீரர்களும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்கள். ஐபிஎல்-இல் தனது முதல் போட்டியில் விளையாடிய உர்வில் படேல், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அது நீண்ட நேரத்திற்கு நிலைக்கவில்லை. 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த அவர் அவுட்டாகி வெளியேறிய நிலையில், மறுமுனையில் விக்கெட்டும் சரிந்து கொண்டிருந்தது.

அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ஆனால், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டேவால்ட் பிரேவிஸ், கொல்கத்தா அணியின் பவுலர்களை சிதறடித்தார். 25 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்த அவரும் அவுட்டாகி வெளியேறிய நிலையில், சென்னை அணி பரிதாபமான சூழலில் சிக்கியது.

பின்னர், தோனியுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடிய துபே 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில், தோனி அடித்த சிக்ஸ் போட்டியை சென்னை அணி பக்கம் திருப்பியது. 

19.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது சென்னை அணி. இதன் மூலம், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது மட்டும் இல்லாமல் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணியின் பிளே ஆப் கனவை கிட்டத்தட்ட இழக்க செய்திருக்கிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
SAT Practice Test: மாணவர்களே.. தேர்வுகளில் வெல்ல கூகுள் ஜெமினியின் இலவசப் பயிற்சி! பயன்படுத்துவது எப்படி?
SAT Practice Test: மாணவர்களே.. தேர்வுகளில் வெல்ல கூகுள் ஜெமினியின் இலவசப் பயிற்சி! பயன்படுத்துவது எப்படி?
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
SAT Practice Test: மாணவர்களே.. தேர்வுகளில் வெல்ல கூகுள் ஜெமினியின் இலவசப் பயிற்சி! பயன்படுத்துவது எப்படி?
SAT Practice Test: மாணவர்களே.. தேர்வுகளில் வெல்ல கூகுள் ஜெமினியின் இலவசப் பயிற்சி! பயன்படுத்துவது எப்படி?
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Chennai Power Shutdown: சென்னைல ஜனவரி 23-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜனவரி 23-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
State Creation: மாநிலத்தை பிரிப்பதற்கான வழிமுறைகள் என்ன? யார் அனுமதி அவசியம்? யாருக்கு அதிகாரம்? எப்படி
State Creation: மாநிலத்தை பிரிப்பதற்கான வழிமுறைகள் என்ன? யார் அனுமதி அவசியம்? யாருக்கு அதிகாரம்? எப்படி
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
Embed widget