SRH vs LSG LIVE Score: எடுபடாத லக்னோ பவுலிங்; இமாலய வெற்றி பெற்ற ஹைதராபாத்!
IPL 2024 SRH vs LSG LIVE Score Updates: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
LIVE
Background
SRH Vs LSG, IPL 2024: லக்னோ மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 56 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் ரேஸ் வேகமெடுத்துள்ளது. ஆனாலும், இதுவரையிலும் ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இதன் காரணமாக மீதமுள்ள ஒவ்வொரு போட்டிகளின் முடிவும் 10 அணிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், இன்றைய லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
ஐதராபாத் - லக்னோ பலப்பரீட்சை:
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றிகளுடன், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய நான்கு லீக் போட்டிகளில் மூன்று தோல்விகளை பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு மேலும் பிரகாசமாகிவிடும். லக்னோ அணியும் 11 போட்டிகளில் விளையாடி ஆறில் வென்றாலும், மோசமான ரன் ரேட் காரணமாக புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க மீதமுள்ள லீக் போட்டிகளில் குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது இரு அணிகளுக்கு அவசியம். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும், இது சென்னை அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. காரணம் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்படும். எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது ஐதராபாத் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. தொடரின் முதல் பாகத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த அணி, தற்போது பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. அபிஷேக் சர்மா மற்றும் கிளாசென் ஆகியோர் ஃபார்மை இழந்து காணப்படுகின்றனர். பந்துவீச்சில் ஆரம்பம் முதலே அந்த அணி பலவீனமாக தான் உள்ளது. இமாலய இலக்குகளை நிர்ணயித்தாலும், போராடி தான் அந்த வெற்றிகளை பெற்றது. தற்போது பேட்டிங்கும் மோசமாக இருப்பதால், பந்துவீச்சில் உள்ள குறைபாடுகள் பெரியதாக தெரிய தொடங்கியுள்ளன. லக்னோ அணியி தொடக்க விரர் டி-காக் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறுவது லக்னோ அணியின் பலவீனமாக உள்ளது. கே,எல். ராகுல், ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். மோஷின் கான், யாஷ் தாக்கூர் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். இருப்பினும் கூட்டு முயற்சியை வெளிப்படுத்த அந்த அணி தவறி வருகிறது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் ஐதராபாத் அணிக்கு எதிராக களம் கண்ட 3 போட்டிகளிலும் லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 185 ரன்களையும், குறைந்தபட்சமாக 127 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 182 ரன்களையும், குறைந்தபட்சமாக 121 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
ஐதராபாத் மைதானம் எப்படி?
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் பேட்ஸ்மேன்களுக்கான சொர்க்கபுரியாக உள்ளது. இந்த ஆடுகளத்தில் ரன்கள் எளிதாகக் கிடைக்கும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து போர்டில் ஒரு பெரிய ஸ்கோரை பதிவு செய்வது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
உத்தேச அணி விவரங்கள்:
ஐதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ் , புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கத்
லக்னோ: KL ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆஷ்டன் டர்னர், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், மயங்க் யாதவ்/கே கவுதம்
SRH vs LSG LIVE Score: எடுபடாத லக்னோ பவுலிங்; இமாலய வெற்றி பெற்ற ஹைதராபாத்!
நடப்பு ஐபிஎல் தொடரின் 57 வது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதிக்கொண்டது. இதில் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்தது. அடுத்த களமிறங்கிய ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழக்காமல் 9.4 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
SRH vs LSG LIVE Score: இறுதியில் கலக்கிய லக்னோ; பலமான பேட்டிங் வரிசை கொண்ட ஹைதராபாத்க்கு 166 ரன்கள் இலக்கு!
20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் இருந்த பதோனி 55 ரன்களும் பூரன் 48 ரன்களும் சேர்த்திருந்தனர்.
SRH vs LSG LIVE Score: 150 ரன்களை எட்டிய லக்னோ !
19.1 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எட்டியது.
SRH vs LSG LIVE Score: அரைசதம் விளாசிய பதோனி!
பதோனி சிறப்பாக விளையாடி 28 பந்தில் 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் சேர்த்துள்ளது.
SRH vs LSG LIVE Score: அரைசதத்தை நெருங்கும் பதோனி!
26 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து பதோனி சிறப்பாக விளையாடி வருகின்றார்.