IPL 2023 Points Table: வெற்றியை சுவைத்த மும்பை இந்தியன்ஸ்... புள்ளி பட்டியலில் முன்னேற்றமா? சென்னை எத்தனையாவது இடம்?
9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 6வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி , ஒரு இடம் சரிந்து 7 வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் நேருக்கு நேர் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 82 ரன்களும், ஜிதேஷ் சர்மா 49 ரன்களும் எடுத்திருந்தனர்.
மும்பை அணியில் சாவ்லா 2 விக்கெட்களும், அர்ஷத் கான் 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரிலேயே கேப்டன் ரோகித் சர்மாவை இழந்தது. அதன்பிறகு இணைந்த இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களில் பந்தை புரட்டி எடுத்தனர். இந்த கூட்டணி 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் உருவாக்கி அரை சதங்கள் கடந்த்து அவுட்டானார்கள். இதை தொடர்ந்து திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் ஆகியோர் உதவியால் மும்பை அணி 19 வது ஓவரிலேயே 7 பந்துகள் மிச்சம் வைத்து வெற்றிபெற்றனர்.
இதையடுத்து 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 6வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி , ஒரு இடம் சரிந்து 7 வது இடத்தில் உள்ளது.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 19 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முடிவு ஏதுமின்றி முடிந்தது.இதையடுத்து, சென்னை மற்றும் லக்னோ அணி தலா ஒரு புள்ளிகளை பகிர்ந்து கொண்டனர். இரு அணிகளும் 2வது மற்றும் 3வது இடங்களில் அப்படியே உள்ளது.
புள்ளி பட்டியல்:
1. குஜராத் டைட்டன்ஸ் - 12 புள்ளிகள்
2. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 11 புள்ளிகள்
3. சென்னை சூப்பர் கிங்ஸ் - 11 புள்ளிகள்
4. ராஜஸ்தான் ராயல்ஸ் - 10 புள்ளிகள்
5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- 10 புள்ளிகள்
6. மும்பை இந்தியன்ஸ் - 10 புள்ளிகள்
7. பஞ்சாப் கிங்ஸ்- 10 புள்ளிகள்
8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 6 புள்ளிகள்
9. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - 6 புள்ளிகள்
10. டெல்லி கேபிடல்ஸ் - 6 புள்ளிகள்
ஆரஞ்சு கேப் :
ஃபாப் டு பிளெசிஸ் இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். நேற்றைய போட்டியில் டேவான் கான்வே, டு பிளெசிஸை முந்துவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், மழை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்வதற்கு முன்பாகவே, மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால், டு பிளெசிஸை டேவான் கான்வே முந்த முடியவில்லை. இஷான் கிஷான் 74 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆரஞ்சு கேப் அட்டவணையில் 12வது இடத்திற்கு முன்னேறினார்.
1. ஃபாப் டு பிளெசிஸ் - 466 ரன்கள் (9 போட்டிகள்)
2. ஜெய்ஸ்வால் - 428 ரன்கள் (9 போட்டிகள்)
3. டெவான் கான்வே - 4114 ரன்கள் (10 போட்டிகள்)
4. விராட் கோலி - 364 ரன்கள் (9 போட்டிகள்)
5. ருதுராஜ் கெய்க்வாட் -354 ரன்கள் (10 போட்டிகள்)
6. சுப்மன் கில் - 339 ரன்கள் (9 போட்டிகள்)
7. கெயில் மேயர்ஸ் - 311 ரன்கள் (10 போட்டிகள்)
8. டேவிட் வார்னர் - 308 ரன்கள் (9 போட்டிகள்)
பர்பிள் கேப்:
அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தொடர்ந்து குஜராத் அணியை சேர்ந்த முகமது ஷமி முதலிடத்தில் நீடிக்கிறார். 17 விக்கெட்களுடன் துஷார் பாண்டே இரண்டாவது இடத்திலும், அர்ஷ்தீப் சிங் 16 விக்கெட்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.
1. முகமது ஷமி - 17 விக்கெட்கள் (9 போட்டிகள்)
2. துஷார் பாண்டே - 17 விக்கெட்கள் ( 9 போட்டிகள்)
3. அர்ஷ்தீப் சிங் - 16 விக்கெட்கள் (10 போட்டிகள்)
4. பியூஸ் சாவ்லா - 15 விக்கெட்கள் (9 போட்டிகள்)
5. முகமது சிராஜ் - 15 விக்கெட்கள் (9 போட்டிகள்)
6. ரஷித் கான் - 15 விக்கெட்கள் (9 போட்டிகள்)
7. ரவீந்திர ஜடேஜா- 14 விக்கெட்கள் (10 போட்டிகள்)
8. ரவிசந்திரன் அஷ்வின் - 13 விக்கெட்கள் (9 போட்டிகள்)