Watch Video: கடைசில இவரையும் கோபப்பட வச்சுட்டீங்களே... முத்தையா முரளிதரனின் வைரல் வீடியோ !
நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் குஜராத் அணி 25 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
![Watch Video: கடைசில இவரையும் கோபப்பட வச்சுட்டீங்களே... முத்தையா முரளிதரனின் வைரல் வீடியோ ! IPL 2022: Sunrisers Muttiah Muralitharan loses his cool as Marco Jansen gave 25 runs in last over against Gujart Titans Watch Video: கடைசில இவரையும் கோபப்பட வச்சுட்டீங்களே... முத்தையா முரளிதரனின் வைரல் வீடியோ !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/28/eb1c8b2c3e0567188715d87ee7feb527_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியை வெல்ல குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது.
இந்நிலையில் கடைசி ஓவரை ஹைதராபாத் அணியின் மார்கோ ஜன்சன் வீசினார். அந்த ஓவரில் குஜராத் அணியின் ரஷீத் கான் 3 சிக்சர்கள் விளாசினார். அத்துடன் குஜராத் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்தப் போட்டிக்கு பிறகு சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான முத்தையா முரளிதரன் மிகவும் கோபம் அடைந்துள்ளார். அவர் கோபம் அடைந்து ஏதோ திட்டுவது போல காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றனர்.
Only tournament in the world that can make Rahul Dravid, MS Dhoni and Muttiah Muralitharan lose their calm.
— Rohit.Bishnoi (@The_kafir_boy_2) April 27, 2022
IPL the great 🔥#SRHvsGT #SRHvGT pic.twitter.com/TV8YXHkbd0
இது தொடர்பான வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஏற்கெனவே ஐபிஎல் போட்டிகளின் போது ராகுல் டிராவிட் மற்றும் மகேந்திர சிங் தோனி கோபம் அடைந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் தலைச்சிறந்த வீரர்களை கூட கோபம் அடைய செய்யும் என்ற வகையில் அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்று வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது. இதன்காரணமாக அந்த அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேசமயத்தில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. குஜராத் அணி தன்னுடைய அடுத்த போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. அதேபோல் சன்ரைசர்ஸ் அணீ வரும் ஞாயிற்று கிழமை நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
மேலும் படிக்க:சின்னக்கவுண்டர் படத்தின் பிரபல வில்லன் நடிகர் உயிரிழப்பு..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)