மேலும் அறிய

IPL 2022: மழை பெய்தால் இதுதான் ரூல்.. ஐபிஎல் பிளே ஆஃப்-க்கு விதிமுறைகளை அடுக்கிய பிசிசிஐ!!

IPL 2022 Playoffs, Playing Conditions Explained: மழையால் ஐ.பி.எல். போட்டிகள் பாதிக்கப்படுமா? பி.சி.சி.ஐ. வெளியிடுள்ள வழிக்காட்டு விதிமுறைகள்.

ஐ.பி.எல். கிரிக்கெடி  திருவிழா முடிவை எட்டி வருகிறது.  இம்மாதம் 29 ஆம் தேதி ஐ.பி.எல் கோப்பையில் யார் பெயர் இடம் பெற போகிறது என்பதற்காக பதில் கிடைத்துவிடும். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகளுக்கு (playoffs) கூட முன்னேறாதது இதுதான் முதல் முறை.

சென்னை, மும்பை அணிகள் ஏமாற்றம் அளித்த சீசனாக இருந்தாலும், புதிதாக சேர்க்கப்பட்ட அணிகள் அதிரடி விளையாட்டால் புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தை தக்கவைத்து கொண்டன. அந்தவகையில் இந்தாண்டு ஒரு புதிய அணி சாம்பியனாக போகிறது; 15 ஆண்டுகால ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூர் அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் ஆர்சிபி ரசிகர்களிடம் இருக்கிறது; இன்னும் சொல்லப்போனால், ஆர்.சி.பி. அணி வெற்றிக் கோப்பையை கையிலேந்த வேண்டும் என்று ஐ.பி.எல். ரசிகர்களின் எதிர்ப்பார்பாகவும் இருக்கிறது. பரபரப்பான ஆட்டம் இறுதிக்கட்டத்திற்கு நெருங்கியுள்ளது.

ஐ.பி.எல். பிளே ஆஃப் போட்டிகள்..

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான முதல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்க இருக்கிறது. முதல் பிளேப் ஆப் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அணிகள் மோதும். இன்றைய ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்ஸ்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்லர்ஸ் அணியும் இறுதிச்சுற்றுக்கு போட்டி போட இருக்கிறது. குலாஃபையர் 1- இல் (Qulaifier 1)வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்; தோல்வியடையும் அணி குவாலிஃபையர் 2ல் பங்கேற்கும். 

இதற்கிடையில், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஃபாஃப் டூப்ளசிஸ் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் எலிமினேட்டர் (Eliminator) போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் 2-இல் மோதும்.

குவாலிஃபையர் 2: முதல் தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற அணியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் குவாலிஃபையர் 1 மற்றும் குவாலிஃபையர் 2 -இல் வெற்றி பெற்ற அணிகள் கோப்பையை வெல்ல போராடும்.

IPL 2022: மழை பெய்தால் இதுதான் ரூல்.. ஐபிஎல் பிளே ஆஃப்-க்கு விதிமுறைகளை அடுக்கிய  பிசிசிஐ!!

குவாலிபயர் 1 : மே 24, குஜராத் V ராஜஸ்தான், இரவு 7.30 மணி, ஈடன் கார்டன்ஸ் கொல்கத்தா. 

எலிமினேட்டர் : மே 25, லக்னோ V பெங்களூரு, இரவு 7.30 மணி, ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா.

குவாலிபயர் 2 : மே 27, குவாலிபயர் 1 தோல்வியாளர் V எலிமினேட்டர் வெற்றியாளர், இரவு 7.30 மணி, அஹமதாபாத்

இறுதிப்போட்டி: மே 29, இரவு 8 மணி, -அஹமதாபாத்.

IPL 2022: மழை பெய்தால் இதுதான் ரூல்.. ஐபிஎல் பிளே ஆஃப்-க்கு விதிமுறைகளை அடுக்கிய  பிசிசிஐ!!

இன்றைய ஆட்டமும் கொல்கத்தா வானிலையும்:

இன்று இரவு கொல்கத்தாவில் ஐ.பி.எல். தகுதிச் சுற்று போட்டிகளின் முதல் ஆட்டம் நடைபெற இருக்கிறது. கொல்கத்தாவில் மழை பெய்து வருவதால்,இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்று கொல்கத்தா வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. மே 25 மற்றும் மே 26 ஆம் தேதிகளில் கொல்கத்தாவில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டிகள் பாதிக்காமல் இருக்க, பி.சி.சி.ஐ. ஐ.பி.எல்/ பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால் என்ன செய்யலாம் என்பதற்கான வழிக்காட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. 

IPL 2022: மழை பெய்தால் இதுதான் ரூல்.. ஐபிஎல் பிளே ஆஃப்-க்கு விதிமுறைகளை அடுக்கிய  பிசிசிஐ!!

பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகள் என்னென்ன:

பிளே ஆஃப் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள்:

பிளே ஆஃப் மற்றும் எலிமினேட்டர் போட்டிகளின் போது மழை குறுக்கிட்டால் இந்தப் போட்டிகள் மறுநாள் நடத்தப்படமாட்டாது.

பிளே ஆஃப் போட்டிகள் மழைக் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டால், ஆட்டத்தை முடிக்க கூடுதல் நேரம் வழங்கப்படும். 

போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால்  டக்வோத் லூயிஸ் (The Duckworth–Lewis–Stern method- DLS method) முறைப்படி போட்டியின் வெற்றியாளர் யார் என்று தீர்மானிக்கப்படுவார்.

இரண்டு அணிகளுக்கும் போட்டியின் ஓவர் ஐந்தாக குறைக்கப்படும். சூப்பர் ஓவர் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்கும். 

மழையின் காரணமாக  குவாலிஃபையர் போட்டிகள், எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற முடியாமல் போனால், புள்ளிப்பட்டியலில் 70 போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகள் உள்ள அணி வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். 

இறுதிப்போட்டி:

A reserve day for the final:

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டால், ’A reserve day' நடைமுறை பின்பற்றப்படும். அதாவது, மே 29 அன்று நடக்க இருந்த இறுதிப்போட்டில் மழையின் குறுக்கீட்டால் மறுநாள் மே, 30 அன்று நடத்தப்படும். 

மே 29 அன்று டாஸ் முடிந்திருந்தாலும், ஆட்டம் கைவிடப்படும் நிலையில், மறுநாள் புதிதாக டாஸ் போட்டப்படும்.

மே 29 ஆம் இறுதிப்போட்டியின் போது டாஸ் வென்று ஒரு பந்து வீசப்பட்டு, ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால், மறுதினம் போட்டி பாதியிலிருந்தே தொடங்கப்படும்.

மழையினால் ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட் விலை அதிகரித்து விற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.  குஜராத், ராஜஸ்தான், பெங்களூர், லக்னோ - இந்த நான்கு அணிகளில் யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

பெங்களூர் அணியின் நெடுநாள்  கனவான ‘ ஏ சாலா கப் நமதே’ (ee sala cup namde) நிறைவேறுமா?

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Embed widget