IPL 2022: தோனி டூ ஜடேஜா- ஐபிஎல் போட்டியின் கடைசி ஓவரில் அதிக சிக்சர் மழை பொழிந்த வீரர்கள் !
ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் அதிக சிக்சர் மழை பொழிந்த வீரர்கள் யார் யார்?
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் தொடர் எப்போதும் பெரிய விருந்தாக அமைந்திருக்கும். இதன்காரணமாக ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடரை இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும். டி20 போட்டிகளை பொறுத்தவரை கடைசி ஓவர் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கும். முதலாவது பேட்டிங் என்றால் கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுக்க அணி முயற்சி செய்யும். அதுவே இரண்டாவது பேட்டிங் என்றால் கடைசி ஓவரில் போட்டியை வெல்ல அணி முயற்சி செய்யும்.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் 20 ஆவது ஓவரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் யார் யார்?
5.ரவீந்திர ஜடேஜா:
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவர் தற்போது வரை 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 85 சிக்சர்கள் விளாசியுள்ளார். அதில் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் 20ஆவது ஓவர்களில் மட்டும் 22 சிக்சர்கள் அடித்துள்ளார்.
4.ஹர்திக் பாண்ட்யா:
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐபிஎல் கண்டுபிடிப்புகளில் ஒருவர் ஹர்திக் பாண்ட்யா. இவர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் கடைசி 5 ஓவர்களில் போட்டியை மாற்றும் திறமை பெற்றவர். இவர் 92 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 98 சிக்சர்கள் விளாசியுள்ளார். குறிப்பாக 20ஆவது ஓவரில் இதுவரை 23 சிக்சர்கள் விளாசி அசத்தியுள்ளார்.
3.ரோகித் சர்மா:
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பல மும்பை அணிக்காக சிறப்பான இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இவர் தற்போது வரை 213 போட்டிகளில் 227 சிக்சர்கள் விளாசியுள்ளார். அதில் 20 ஆவது ஓவர்களில் மட்டும் 23 சிக்சர்கள் அடித்துள்ளார்.
2.பொல்லார்டு:
மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்றொரு சிறப்பான வீரர் பொல்லார்டு. இவர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் பல முறை மும்பை அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார். இவர் தற்போது வரை 178 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 214 சிக்சர்கள் அடித்துள்ளார். குறிப்பாக ஆட்டத்தின் 20ஆவது ஓவர்களில் இவர் 30 சிக்சர்கள் விளாசி அசத்தியுள்ளார்.
1.மகேந்திர சிங் தோனி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலை சிறந்த ஃபினிசர்களில் ஒருவர். இவர் கடைசி கடத்தில் இறங்கி தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பார். இவர் தற்போது வரை 220 போட்டிகளில் விளையாடி 219 சிக்சர்கள் விளாசியுள்ளார். அதில் கடைசி ஓவர்களில் மட்டும் 50 சிக்சர்கள் விளாசி முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பொல்லார்டை விட இவர் கடைசி ஓவரில் மட்டும் 20 சிக்சர்கள் கூடுதலாக அடித்துள்ளார்.
மேலும் படிக்க: ”சோக்கா இருக்குதுப்பா மஞ்ச சொக்கா” - புதிய ஜெர்ஸியை வெளியிட்டிருக்கிறது சி.எஸ்.கே அணி..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்