CSK Jersey Revealed: ”சோக்கா இருக்குதுப்பா மஞ்ச சொக்கா” - புதிய ஜெர்ஸியை வெளியிட்டிருக்கிறது சி.எஸ்.கே அணி..
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர். பல்வேறு அணிகளின் வீரர்களும் தங்களுடைய நாடுகளிலிருந்து மும்பை வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் குஜராத் மாநிலத்தின் சூரத்தில் தன்னுடைய பயிற்சியை மேற்கொண்டது.
இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். இந்நிலையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
Sokka keedhu pa namma manja sokka! 😍 💛#WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/k9ReuzPVfV
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2022
Unveiling with Yellove! 💛
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2022
Here’s a 👀 at our new threads in partnership with @TVSEurogrip! 🥳#TATAIPL #WhistlePodu 🦁 pic.twitter.com/pWioHTJ1vd
முன்னதாக எதற்காக சூரத்தில் பயிற்சி செய்கிறோம் என்பது தொடர்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “நாங்கள் கடந்த ஒரு வாரமாக இங்கு சிறப்பாக பயிற்சி செய்து வருகிறோம். அனைத்து அணிகளும் மும்பையில் பயிற்சி செய்வதால் எங்களுக்கு பயிற்சி செய்ய சிக்கலாக இருந்திருக்கும். ஆகவே தான் நாங்கள் மும்பைக்கு பதிலாக அதே போன்று சூழல் உள்ள சூரத் நகரை பயிற்சிக்கு தேர்ந்தெடுத்தோம். இந்த முழு ஆடுகளமும் எங்களுக்கு கிடைத்தது. இதன்காரணமாக நீண்ட நேரம் நாங்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டோம். அத்துடன் சில பயிற்சி போட்டிகளும் விளையாடினோம். இது எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்