Dinesh Kartik: களத்தில் மட்டுமல்லாமல் ட்விட்டர் தளத்திலும் ஃபையராக பதிலளித்த தினேஷ் கார்த்திக் !
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியை பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் பேட்டிங்கின் போது தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் விளாசி 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்காரணமாக அவருடைய ஆட்டத்தை ரசிகர்கள் பலரும் புகழ்ந்தனர். இந்நிலையில் ஆட்டத்திற்கு பிறகு அவரை விராட் கோலி பேட்டி எடுத்தார். அதில், “எனக்கு ஒரு சிறிய இலக்கு மற்றும் ஒரு தொலை தூர இலக்கு உள்ளது. சிறிய இலக்கு என்பது தற்போது ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்பது தான். ஏன்னெறால் ஆர்.சி.பி அணிக்கு நான் ஏலத்தில் எடுக்கப்பட்ட போது சஞ்சய் பங்கார் என்னை அழைத்தார். அப்போது டிவில்லியர்ஸ் அணியில் இல்லை. அவருடைய இடத்தை யாரும் நிரப்ப முடியாது.
“The ultimate goal is to win games for India”: @DineshKarthik tells @imVkohli 🙌🏻
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
Special: @28anand gets DK and VK in one frame post #RCB's win against #DC👌🏻
Full interview 🎥 🔽 #TATAIPL | #DCvRCB https://t.co/8IHrM2SbN0 pic.twitter.com/UiOZsBZQ31
எனினும் எங்கள் அணிக்கு ஒரு நல்ல ஃபினிசர் தேவை. அதை நீங்கள் செய்ய வேண்டும் என்று கூறினார். அதை நான் தற்போது செய்து வருகிறேன். அதேபோல் என்னுடைய தொலை தூர இலக்கு இந்திய அணிக்காக விளையாடி போட்டிகளை வென்று தருவதே ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
Hope the drive was worth it 🤗 https://t.co/EpMBHOmghQ
— DK (@DineshKarthik) April 17, 2022
நேற்றைய போட்டியின் போது ரசிகர் ஒருவர் 1000 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆர்சிபியின் ஆட்டத்தை பார்க்க வந்துள்ளோம் எனப் பதிவிட்டிருந்தார். அவருடைய பதிவிற்கு தினேஷ் கார்த்திக் ஒரு பதில் பதிவை செய்துள்ளார். அதில், “உங்களுடைய பயணம் வீண் போகவில்லை என்று கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவை பலரும் லைக் செய்து நீங்கள் கூறியது உண்மை தான் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்