IPL 2021, MI vs CSK: சென்னை-மும்பை ஐபிஎல் போட்டியில் தோனியும் விஜய்யும்.. கெத்துகாட்டும் ரசிகர்கள்!
சென்னை-மும்பை போட்டியில் மைதானத்தில் நடிகர் விஜய் ரசிகர் ஒருவர் வைத்துள்ள பதாகை படம் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டு பிளசிஸ் காயம் குணம் அடைந்து சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி சென்னை அணியில் தோனி,ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, டுபிளசிஸ், ரெய்னா, ஜடேஜா,தீபக் சாஹர், ஷர்தல் தாகூர்,பிராவோ,ஹேசல்வூட் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர். அதேபோல் மும்பை அணியில் சிறிய காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அத்துடன் ஹர்திக் பாண்ட்யாவும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இன்று தன்னுடைய 100ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்கியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளதால் மீண்டும் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் தற்போது ஒரு பதிவு வேகமாக வைரலாகி வருகிறது. அதாவது அந்தப் பதிவில் ஒரு மாஸ்டர் த பிளாஸ்டர் என்று ஒருவர் பதாகையுடன் இருக்கிறார். அதில் நடிகர் விஜய் மற்றும் சென்னை அணியின் கேப்டன் தோனி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
Master the blaster....⚡#Mi #MumbaiIndians #MIvsCSK #master #beast@actorvijay pic.twitter.com/icssrt33Gf
— KathirArulmozhi (@ArulmozhiKathir) September 19, 2021
இந்த ஐபிஎல் இரண்டாவது பாதிக்கு முன்பாக சென்னை வந்த கேப்டன் தோனி ஒரு விளம்பர படப்பிடிப்பின் போது நடிகர் விஜயை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தார். அந்த படமும் வேகமாக வைரலானது. தற்போது ரசிகர் ஒருவர் விஜய் மற்றும் தோனி படத்துடன் உள்ள படமும் வேகமாக வைரலாக தொடங்கியுள்ளது.
இதற்கிடையே முதலில் பேட்டிங்கை தொடங்கிய சென்னை தற்போது வரை 7 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்துள்ளது. அத்துடன் அம்பத்தி ராயுடு காயம் காரணமாக வெளியே சென்றுள்ளார். டிரென்ட் பொல்ட் 2 விக்கெட்களையும் மற்றொரு நியூசிலாந்து வீரர் அடேம் மில்னே ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.
நடப்பு தொடரில் நடப்பு தொடரில் இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 2 தோல்வி மற்றும் 5 வெற்றியை பெற்றுள்ளது. அதேசமயத்தில் மும்பை அணி தற்போது வரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 3 தோல்விகளை பெற்றுள்ளது. ஆகவே இரண்டாவது பாதியை வெற்றியுடன் தொடக்க இரு அணிகளும் தீவிரமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க: சி.எஸ்.கே.,வும் பொல்லாதவன் பொல்லார்டும்..மும்பை அணி ஆபத் பாந்தவனின் அதிரடி ஆட்டங்கள்!