மேலும் அறிய

TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!

TN Rain Update: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (16-12-2024) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள கற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை எச்சரிக்கை:

வரும் 18-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை விவரம்:

16-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17-12-2024: வட கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். திருவாரூர். நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

18-12-2024: வட கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

19-12-2024: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

20-12-2024: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21-12-2024 மற்றும் 22-12-2024:

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN weatherman: அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
Redfort Blast: டெல்லி கார் வெடிப்பு - அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் - ஷாக்கிங் அப்டேட்ஸ்
Redfort Blast: டெல்லி கார் வெடிப்பு - அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் - ஷாக்கிங் அப்டேட்ஸ்
மதுரையில் எங்கெல்லாம் நாளை (12.11.2025) மின்தடை... வந்துவிட்டது பைனல் லிஸ்ட் !
மதுரையில் எங்கெல்லாம் நாளை (12.11.2025) மின்தடை... வந்துவிட்டது பைனல் லிஸ்ட் !
Actor Dharmendra: தர்மேந்திரா உயிரிழந்ததாக பரவிய வதந்தி.. டென்ஷனான மகள் ஈஷா தியோல்!
Actor Dharmendra: தர்மேந்திரா உயிரிழந்ததாக பரவிய வதந்தி.. டென்ஷனான மகள் ஈஷா தியோல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi Car Blast | செங்கோட்டை அருகேவெடித்து சிதறிய கார்பதற்றத்தில் டெல்லி!பரபரப்பு காட்சிகள்
Christmas Cake Making | வந்தாச்சு கிறிஸ்துமஸ்!தனியார் சொகுசு ஹோட்டலில் தயாராகும் 200 கிலோ CAKE
90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN weatherman: அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
Redfort Blast: டெல்லி கார் வெடிப்பு - அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் - ஷாக்கிங் அப்டேட்ஸ்
Redfort Blast: டெல்லி கார் வெடிப்பு - அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் - ஷாக்கிங் அப்டேட்ஸ்
மதுரையில் எங்கெல்லாம் நாளை (12.11.2025) மின்தடை... வந்துவிட்டது பைனல் லிஸ்ட் !
மதுரையில் எங்கெல்லாம் நாளை (12.11.2025) மின்தடை... வந்துவிட்டது பைனல் லிஸ்ட் !
Actor Dharmendra: தர்மேந்திரா உயிரிழந்ததாக பரவிய வதந்தி.. டென்ஷனான மகள் ஈஷா தியோல்!
Actor Dharmendra: தர்மேந்திரா உயிரிழந்ததாக பரவிய வதந்தி.. டென்ஷனான மகள் ஈஷா தியோல்!
Jananayagan: ஜனநாயகன் படம் இப்படித்தான் இருக்கும்.. வெளியான மாஸ் அப்டேட்!
Jananayagan: ஜனநாயகன் படம் இப்படித்தான் இருக்கும்.. வெளியான மாஸ் அப்டேட்!
Delhi Blast: கார் குண்டு வெடிப்பால் குலுங்கிய டெல்லி.! பாதுகாப்பை அதிகரியுங்க- அலர்ட் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள்
கார் குண்டு வெடிப்பால் குலுங்கிய டெல்லி.! பாதுகாப்பை அதிகரியுங்க- அலர்ட் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள்
Job Alert: சொந்த ஊரிலே பெண்களுக்கு வேலை.! கை நிறைய சம்பளம்- உடனே விண்ணப்பிக்க அரசு அழைப்பு
சொந்த ஊரிலே பெண்களுக்கு வேலை.! கை நிறைய சம்பளம்- உடனே விண்ணப்பிக்க அரசு அழைப்பு
Lord Muruga Dreams: உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!
Lord Muruga Dreams: உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!
Embed widget