Harbhajan Singh : ”பேசி 10 வருஷம் ஆச்சு!” தோனி கிட்ட என் லிமிட் இதான்.. ஹர்பஜன் பகீர் பேச்சு
Harbhajan Singh : தோனியிடம் இரண்டு முறை பேச முயற்சித்தேன், ஆனால் எந்த பதிலும் வரவில்லை இதன் காரணமாக அவருடன் பேசுவது இல்லை என்று ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
நானும் தோனியும் பேசி பத்து வருடங்கள் ஆகிறது என்று ஹர்பஜன் கூறியுள்ளது கிரிக்கெட் பரப்பரப்பை கிளப்பியுள்ளது.
ஹர்பஜன் சிங்:
இந்திய அணியின் டெர்பனேடர் என்று செல்லமாக அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். இவர் 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். சென்னை அணிக்காக ஹர்பஜம் விளையாடிய போது அவர் எக்ஸ் பக்கத்தில் போடும் பதிவுகள் மிக பிரபலமானதாக இருந்தது.
10 வருடங்கள்:
இதற்கிடையில் ஹர்பஜன் சிங் ஒரு அதிர்ச்சியான தகவலை கூறியிருக்கிறார், நானும் தோனியும் பேசி 10 ஆண்டுகள் ஆகிறது. சென்னை அணிக்காக இருவரும் விளையாடி இருந்தாலும், இருவரும் களத்தில் போட்டி சம்பந்தப்பட்ட உரையாடல்கள் மட்டுமே இருந்ததாக கூறியுள்ளார். ஒருவேளை தோனி தன்னிடம் பேசாமல் இருப்பதற்கு காரணம் இருக்கலாம் என்றும் ஹர்பஜன் சுட்டிக்காட்டினார். இருப்பினும், என்னைப் பொறுத்தவரை, அவர் என்னிடம் பேசாமல் இருக்க காரணம் ஒன்று இல்லை என்று தோன்றுகிறது.
"இல்லை, நான் தோனியுடன் பேசவில்லை, நாங்கள் இருவரும் பேசி 10 வருடங்கள் மற்றும் அதற்கு மேல் கூட இருக்கலாம். அவரிடம் பேசாமல் இருக்க எனக்கு எந்த காரணமும் இல்லை, ஒருவேளை அவருக்கு எதாவது காரணம் இருக்கலாம். 'சிஎஸ்கேவில் நாங்கள் விளையாடும்போது கூட எங்கள் இருவருக்கும் உடனான பேச்சுவார்த்தை என்பது மைதானத்திற்குள் மட்டுமே இருக்கும் அதை தாண்டி நாங்கள் பேசியது கிடையாது.
தோனியிடம் இரண்டு முறை பேச முயற்சித்தேன், ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்று சுட்டிக்காட்டினார். எனவே, மீண்டும் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க முடிவு செய்தேன் என்றார்.
இதையும் படிங்க: KKR New Captain: Jinx-க்கு அடிக்கிறதா ஜாக்பாட்! கொல்கத்தாவின் புதிய கேப்டன் ரகானே?
மரியாதை என்பது முக்கியம்:
மேலும் "எனக்கு தோனிக்கு எதிராக எதுவும் இல்லை, அவர் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், அவர் என்னிடம் சொல்லலாம். ஆனால் அவர் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால், அவர் என்னிடம் சொல்லியிருப்பார். நான் அவரை அழைக்க முயற்சி செய்யவில்லை. நான் என் அழைப்பை எடுப்பவர்களை மட்டும் அழைப்பேன். நீங்கள் என்னை தொடர்பு கொண்டு அழைத்தால் நான் உங்களுடம் நட்புடன் இருப்பேன்" ஒரு உறவில் மரியாதை என்பது மிக முக்கியம், நீங்கள் எனக்கும் மரியாதை கொடுத்தால், அதே மரியாதையை நான் உங்களுக்கு திருப்பி கொடுப்பேன், ஆனால் நான் கூப்பிடும் போது நீங்கள் பதில் அளிக்கவில்லை என்றால், அதன் பிறகு எனக்கு தேவையான போது தான் உங்களை சந்திப்பேன்"என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.