GT vs LSG: கில்லால் கரை சேர்ந்த குஜராத் அணி... லக்னோவுக்கு 145 ரன்கள் டார்கெட்!
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், முதலில் பேட் செய்த குஜராத் அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.
2022 ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் சாஹா வந்த வேகத்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரை அடுத்து மேத்யூ வாடேவும் அவுட்டாக, பவர்ப்ளே முடிவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் அணி. விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமாக ஆடிய சுப்மன் கில், அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
For his fighting knock of 63* off 49 deliveries, @ShubmanGill is our Top Performer from the first innings.
— IndianPremierLeague (@IPL) May 10, 2022
A look at his batting summary here 👇👇 #TATAIPL #LSGvGT pic.twitter.com/1nyh6ZJDnR
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், முதலில் பேட் செய்த குஜராத் அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்த ஐ.பி.எல். தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் அணியும், லக்னோ அணியும் அனுபவம் வாய்ந்த அணிகளையே வீழ்த்தும் அளவிற்கு வலிமை மிகுந்த அணிகளாக இந்த தொடரில் வலம் வருகின்றனர்.
லக்னோ அணியைப் பொறுத்தவரை அந்த அணிக்கு கேப்டன் கே.எல்.ராகுல் பலமாக உள்ளார். கடந்த போட்டியில் எந்த பந்தையும் சந்திக்காமல் அவர் அவுட்டாகியதால் இந்த போட்டியில் அதிரடி காட்ட முனைப்புடன் ஆடுவார். அவருக்கு டி காக்கும் அதிரடியில் ஒத்துழைப்பு அளிப்பார். லக்னோ அணிக்கு ஒன் டவுன் வீரராக தீபக் ஹூடா அசத்தி வருகிறார். இந்த போட்டியிலும் அவரது அசத்தல் பேட்டிங் தொடர வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் ஸ்டோய்னிஸ் கடைசி கட்டத்தில் காட்டிய அதிரடியை இந்த போட்டியிலும் காட்ட வேண்டியது அவசியம்.
குஜராத் அணியைப் பொறுத்தவரை ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை என்ற சூழலில் அந்த அணி கடந்த இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், லக்னோவின் ஆட்டத்தை கட்டுப்படுத்தி இப்போட்டியை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதை பார்ப்போம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்