Badrinath: ஏன் இவ்வளவு வன்மம்? ஆர்சிபியை கலாய்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர்.. கொதித்த ஈ சாலா பாய்ஸ்
Badrinath trolls RCB: முன்னாள் CSK வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் சமூக ஊடகங்களில் ஆர்சிபியை ட்ரோல் செய்ய ஒரு வைரல் மீமை மீண்டும் உருவாக்கினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுப்ரமணியம் பத்ரிநாத் வெளியிட்ட மீம் வீடியோ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்களை கடுப்பாகி உள்ளது.
ஐபிஎல் 2025:
ஐபிஎல் 2025 மார்ச் 22 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, இதில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளது. சிஎஸ்கே vs ஆர்சிபி அணிகள் மார்ச் 28 ஆம் தேதி எம்ஏ சிதம்பரம் மைதானத்திலும், இரண்டாவது மோதல் மே 3 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும்.
CSK மற்றும் RCB அணிகளுக்கு இடையிலான போட்டி எப்போதும் தீவிரமாக இருந்து வருகிறது, இதனால் இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஐபிஎல் 2024 இல் அவர்களின் கடைசி மோதல் மிகவும் பரபரப்பாக இருந்தது, இரு அணிகளும் 'டூ-ஆர்-டை' போட்டியில் வெற்றியைப் பெற்று பிளேஆஃப் இடத்தைப் பிடித்தது, மேலும் சென்னைஅணியை போட்டியில் இருந்து வெளியேற்றியது. முதலில் பேட்டிங் செய்த RCB அணி 218 ரன்கள் எடுத்து RCB அணியை 191 ரன்களுக்குள் வீழ்த்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பத்ரிநாத் கிண்டல்:
முன்னாள் CSK வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் சமூக ஊடகங்களில் ஆர்சிபியை ட்ரோல் செய்ய ஒரு வைரல் மீமை மீண்டும் உருவாக்கினார்.பத்ரிநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிஎஸ்கே அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, மற்ற அனைத்து ஐபிஎல் அணிகளின் பிரதிநிதிகளையும் கைகுலுக்கி அல்லது கட்டிப்பிடித்து அன்புடன் வரவேற்கும் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார். இருப்பினும், ஆர்சிபி பிரதிநிதி வீடியோவில் தோன்றியபோது, பத்ரிநாத் அவரை வெளிப்படையாகப் பார்த்துவிட்டு அவரைப் புறக்கணித்துவிட்டு நடந்து செல்கிறார்.
View this post on Instagram
இந்த வீடியோ தான் தற்போது ஆர்சிபி அணி ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. பத்ரிநாத்துக்கு பெங்களூரு அணி மேல் அப்படி என்ன கோபம் உள்ளது, ஆர்சிபி அணிக்காக 2015 ஐபிஎல் சீசனில் வாட்டர் பாயாக தான இருந்தீர்கள் என்றும் கடந்த ஆண்டு ஏற்ப்பட்ட தோல்விக்கு இன்னுமா அழுதுக்கொண்டு இருக்கீறிர்கள் என்று அந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

