Dinesh Karthik: அடிபட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து.. கிரிக்கெட் ராக்கி.. - தினேஷ் கார்த்திக் மீண்டு வந்த கதை!!
ஆரம்பத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை முதல் ஃபார்ம் அவுட்டாகி மீண்டும் எழுந்து வந்த கதையை சொல்லி இருக்கிறது அந்த பதிவு.
![Dinesh Karthik: அடிபட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து.. கிரிக்கெட் ராக்கி.. - தினேஷ் கார்த்திக் மீண்டு வந்த கதை!! A twitter thread is trending on how Dinesh Karthik has given a massive comeback in cricket ipl Dinesh Karthik: அடிபட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து.. கிரிக்கெட் ராக்கி.. - தினேஷ் கார்த்திக் மீண்டு வந்த கதை!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/20/11c38986af8c1f3d6e21793cf0e02d1f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2022 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், கடந்த சில போட்டிகளில் அணியின் மீட்பராக வந்து முக்கிய வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். தினேஷின் அதிரடியான இந்த ஃபார்ம் கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள் என கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் பற்றிய பாராட்டு பதிவுகள் குவிந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில், தனி ஒரு ஆளாக அசத்தி வரும் தினேஷ் கார்த்திக், "இந்திய அணிக்குள் நுழைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இது, அதற்கான படி” என தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, தினேஷ் கார்த்திக்கிற்கு சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டுமென கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கையைப் பற்றிய ட்விட்டர் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை முதல் ஃபார்ம் அவுட்டாகி மீண்டும் எழுந்து வந்த கதையை சொல்லி இருக்கிறது அந்த பதிவு. முதல் திருமண வாழ்க்கை கசந்ததை அடுத்து, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து, அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது வரை அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Thread: The story of Dinesh Karthik is amazing
— vi (@oyevivekk) April 19, 2022
DK was doing very well and was the 2nd wkt keeper to Dhoni in the Indian team and was captain of TN. His team mate Murali Vijay was having an affair with his wife and the entire TN Ranji team knew this but not DK.
Continue... pic.twitter.com/k8mLlbEw61
இரட்டைக் குழந்தைகள் பிறந்து 6 மாத ஓய்விற்கு பிறகு, க்ளாஸ்கோவில் நடைபெற்ற உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றியை கண்டார் தீபிகா. இப்போது, பெங்களூரு அணியின் ஃபினிஷராகவும், ஐபிஎல் தொடரின் கவனிக்க வைக்கும் வீரராகவும் விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)