மேலும் அறிய

Ipl funniest moments: மாஸ்க் அணிவது பழசு - வாயில் டேப் அணியும் பொல்லார்ட் ஸ்டைல் : ஐ.பி.எல் வேடிக்கைகள்!

14-வது சீசன் வரை வந்துவிட்ட ஐபிஎல் தொடரில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது - அதில் சில வேடிக்கையான நிகழ்வுகளை தற்போது காணலாம்.

1) பால் எங்கே சென்றது ?

ஐபிஎல் 2019 தொடரில் பஞ்சாப், பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ​​டைம் அவுட் நேரம் முடிந்தபின் போட்டியை தொடங்கலாம் என பார்த்தால் பந்தை மைதானத்தில் காணவில்லை. அனைவருக்கும் ஒரே ஆச்சரியம் பந்து எங்கே போனது என்று, வழக்கமாக சிக்சர் அடித்து பந்துகள் தொலைவதும், மைதானத்திற்கு வெளியே செல்வதும் பாத்திருப்போம், ஆனால் இந்த முறை பந்து எங்கே இருந்தது என்ற வேடிக்கையை நீங்களே பார்த்து ரசியுங்கள்...

வீரர்கள் முதல் நடுவர் வரை அனைவரும் பந்து எங்கே போனது என்று தலையை போட்டு பிய்த்துக்கொள்ள, இறுதியில் மூன்றாவது நடுவர் தான் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தார். பந்து நடுவரின் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடியது ரசிகர்கள் மத்தியில் வேடிக்கையாக இருந்தது.

2) மங்கூஸ் பேட் 

வழக்கமான கிரிக்கெட் பேட்டை பார்த்திருப்பீர்கள், ஆனால் 2010-ஆம் ஆண்டு  ஐபிஎல் தொடரில் சென்னை அணி வீரர் மாத்யு ஹேடன் ஒரு புது விதமான பேட்டுடன் களத்திற்கு வந்தார், அது தான் ‘மங்கூஸ் பேட்’. மங்கூஸ் பேட்டுடன் களமிறங்கிய ஹேடன் 43 பந்துகளில் 93 ரன்களை விளாசி ரசிகர்களுக்கு விருது படைத்தார்.

அது குறித்து பின்னர் பேசிய ஹேடன் "தயவுசெய்து இந்த பேட் பயன்படுத்த வேண்டாம், வாழ்க்கையில் நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன்!" என்று தோனி தன்னிடம் சொன்னதாக தெரிவித்தார்.

3) ஒரே பால் - இரண்டு அவுட் 

கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் அவுட் ஆகுறது சகஜம்தான், ஆனால் ஒரே பந்தில் இரண்டு வித்தியாசமான முறையில் அவுட் ஆகி பார்த்து இருக்கீங்களா ? 2020 ஐபிஎல் தொடரில் ரஷீத் கான் இரண்டு வெவ்வேறு வழிகளில் ஆட்டமிழந்தார் "முதலில் ஒரு பெரிய ஹிட் அடிக்க முயன்ற ரஷீத், தீபக் சாஹரால் கேட்ச் ஆனார், அதே நேரம் தற்செயலாக ஸ்டம்பில் கால் வைத்து பெயில்ஸ் தட்டி விட்டார்.

Ipl funniest moments: மாஸ்க் அணிவது பழசு - வாயில் டேப் அணியும் பொல்லார்ட் ஸ்டைல் : ஐ.பி.எல் வேடிக்கைகள்!

4) நடுவர்களுக்கு ஆப்பிள் கொடுக்கப்பட்ட மொமெண்ட்

வழக்கமாக போட்டி துவங்கும் முன் மைதானம் உள்ளே நடுவர்கள் வரும்போது, அவர்களிடம் பால் வழங்கப்படும். ஆனால் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொல்கத்தா, புனே அணிகள் இடையேயான போட்டிக்கு முன் பந்திற்கு பதிலாக கூடை நிறைய ஆப்பிள் பழங்கள் வழங்கப்பட்டன.

Ipl funniest moments: மாஸ்க் அணிவது பழசு - வாயில் டேப் அணியும் பொல்லார்ட் ஸ்டைல் : ஐ.பி.எல் வேடிக்கைகள்!

5) மாஸ்க் போடுறது பழைய ஸ்டைல் - வாயில் டேப் போடுறது கைரன் பொல்லார்ட் ஸ்டைல்

2015-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது களத்திற்கு உள்ளே வந்த  கைரன் பொல்லார்ட்டை தொடர்ந்து சக மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான கிறிஸ் கையில் இடம் தொடர்ந்து வம்பு பேச்சில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார். அதை கண்ட நடுவர்கள் பேச்சை குறைத்துக்கொள்ளுமாறு கைரன் பொல்லார்ட்டை எச்சரித்தனர், உடனே தனது பாணியில் ரிப்ளை செய்த பொல்லார்ட் வாயில் டேப் ஒட்டிக்கொண்டு போட்டியில் பங்கேற்றார். ஐபிஎல் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத நிகழ்வாக இது அமைந்தது.

Ipl funniest moments: மாஸ்க் அணிவது பழசு - வாயில் டேப் அணியும் பொல்லார்ட் ஸ்டைல் : ஐ.பி.எல் வேடிக்கைகள்!

6) என்னையா துரத்துற? - ஸ்பைடர் கேம் துரத்திய கிறிஸ் கைல் 

ஐபிஎல் தொடரின் போட்டியின் நடுவே மைதானத்தில் ஸ்பைடர் கேம் என்பது வானில் படம்பிடித்துக்கொண்டு, அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டே இருக்கும். கிறிஸ் கைல் களத்தில் இருந்தாலே எப்போதும்  என்டெர்டைன்மெண்ட் தான், அவர் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் திடீரென நகர்ந்து கொண்டிருக்கும் ஸ்பைடர் கேம் துரத்திப்பிடிக்க முயற்சி செய்த நிகழ்வு ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeralஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
Embed widget