Watch Video: கியா காரில் கயாமுயா சத்தமில்லாமல் இறங்கிய ருதுராஜ்... வீதிக்கு வந்து வரவேற்ற தாய்!
சிஎஸ்கேவின் தொடக்க வீரர் ருதுராஜ், இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். 16 போட்டிகளில் ஆடி 16 இன்னிங்சிலும் பேட் செய்து 635 ரன்களை குவித்துள்ளார்.
இந்தியாவைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2021 ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியதோடு முடியவுக்கு வந்தது. நான்காவது முறையாக கோப்பையைத் தட்டியுள்ள சென்னை அணிக்கு இந்த சீசனில் ஓப்பனர்கள் ருதுராஜூம், டுப்ளெசியும் அணியின் மிகப்பெரிய பலமாக இருந்தனர். ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளிலும் அதிரடியாக பேட்டிங் செய்து அனைவரது பாராட்டையும் பெற்று சொந்த ஊர் திரும்பிய ருதுராஜூக்கு பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் செம வைரலானது.
Mersal Arasan 🔙 Home 💛#WhistlePodu #Yellove 🦁 @Ruutu1331 pic.twitter.com/SlOFnkvF9o
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 17, 2021
சிஎஸ்கேவின் தொடக்க வீரர் ருதுராஜ், இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். 16 போட்டிகளில் ஆடி 16 இன்னிங்சிலும் பேட் செய்து 635 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 101 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில், 1 சதம், 4 அரைசதங்களை அடித்துள்ளார்.
சிஎஸ்கேவின் மற்றொரு தொடக்க வீரரான டுப்ளெஸி, 16 போட்டிகளில் ஆடி 16 போட்டிகளிலும் பேட்டிங் செய்து 633 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றுள்ளார். இந்த தொடரில் மட்டும் டுப்ளெஸி 6 அரைசதங்களை அடித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான் இறுதிப்போட்டியில் 86 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
This Du🦁🦁#WhistlePodu #Yellove #SuperCham21ons 💛🦁 pic.twitter.com/AzNT6CZ2bc
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 15, 2021
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ருதுராஜ், 2018-19ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். இதனால், இந்தத் தொடருக்கு பிறகு 2019ஆம் ஆண்டு சென்னை அணி ருதுராஜை ஏலத்தில் எடுத்தது. எனினும் 2019ஆம் ஆண்டு தொடர் முழுவதும் சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் அவர் இடம் பிடிக்கவில்லை.
2020 ஐபிஎல் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், 2021 ஐபிஎல் தொடரில் டுப்ளெஸியுடன் தொடக்க வீரராக களமிறங்கினார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு சிறப்பாக விளையாடிய அவர், இந்த தொடரின் ‘வளர்ந்து வரும் இளம் வீரர்’ என்ற விருதையும் தட்டிச்சென்றுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்