Indian Hockey Men Team Rank: ”போடு வெடிய” ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவுக்கு ஜாக்-பாட்; சர்வதேச அளவில் மூன்றாம் இடம்..!
Indian Hockey Men Team Rank: 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்ற பின்னர் சர்வதேச அளவிலான ரேங்க் பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம் அடைந்துள்ளது.
Indian Hockey Men Team Rank: 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்ற பின்னர் சர்வதேச அளவிலான ரேங்க் பட்டியலில் இந்திய ஆடவர் அணி முன்னேற்றம் அடைந்துள்ளது.
இந்திய ஆடவர் ஹாக்கி அணி சர்வதேச அளவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023ஆம் ஆண்டுக்கான கோப்பையை இந்திய அணி தட்டித் தூக்கியது. குறிப்பாக இந்த தொடரில் இந்திய பெற்ற வெற்றியால் சர்வதேச அளவில் இந்திய அணி 4வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தில் ஐரோப்பிய ஹாக்கி ஃபெடரேசனைச் சேர்ந்த நெதர்லாந்து அணி 3095.90 புள்ளிகளுடனும், அதே ஐரோப்பிய ஹாக்கி ஃபெடரேசனைச் சேர்ந்த பெல்ஜியம் அணி 2917.87 புள்ளிகளுடனும் உள்ளது. இதையடுத்து இந்திய அணி 2771.35 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் யாராலும் வீழ்த்தப்படமுடியாத அணியாக வலம் வந்ததே சர்வதேச அளவில் புள்ளிப்பட்டியலில் முன்னேற முக்கிய காரணமானது. அதாவது, இந்த ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில், சீனாவை எதிர்கொண்டது. அதில் இந்திய அணி 7-2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்த சீசனை மிகவும் பிரமாண்ட வெற்றியுடன் தொடங்கியது. அதேபோல் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 1-1 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. (ஜப்பான் அணியை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது) அதேபோல் இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்திய அணி தனது அடுத்த போட்டியில் சௌத் கொரியவை எதிர் கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து லீக் போட்டியில் கடைசி போட்டியாக இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. அந்த போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பெற்ற தோல்வியால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. பாகிஸ்தான் அணி இந்திய அணியை வென்றதால், ஜப்பான் அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் ஜப்பான் அணியை இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி நேற்று அதாவது ஆகஸ்ட் 12-ஆம் தேதி, இறுதிப் போட்டியில் பலமான மலேசியாவை எதிர்கொண்டது. அந்த போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றதுடன் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4வது முறையாக வென்றது.