India Vs Srilanka T20 | இந்தியா-இலங்கை முதல் டி20 போட்டிகள் இன்று தொடக்கம்..!
இலங்கை அணியுடன் இந்தியா மோதும் முதல் டி20 போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதே சமயத்தில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் இலங்கையில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த போட்டிகளில் இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், தீபக் சாஹர், பிரித்விஷா ஆகியோரது ஆட்டம் பாராட்டத்தக்க அளவில் இருந்தது. மேலும், இலங்கைக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து 9வது முறையாக ஒருநாள் போட்டித் தொடரை வென்றது.
இந்த நிலையில், இலங்கை அணியுடனான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான முதல் டி20 போட்டி இன்று அந்த நாட்டின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. உலககோப்பை டி20 போட்டி தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் இரு அணிகளுக்குமே இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் ஷிகர்தவான், இஷான் கிஷான், மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா என்று வலுவான வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் புவனேஷ்குமார், தீபக்சாஹர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் இந்திய அணி சார்பில் 5 வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும், அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அந்த அணியில் தொடக்க வீரர் அவிஷ்கா பெரனாண்டோ மற்றும் பானுகா தொடர்ந்து நல்ல தொடக்கத்தை தருகின்றனர். டெயிலண்டர்கள் வரிசையில் கருணரத்னே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ, இங்கிலாந்து தொடருக்கு பிறகு எனது பேட்டிங்கில் கூடுதல் பயிற்சி மேற்கொண்டேன். அது எனக்கு கூடுதல் ரன்களை சேகரிக்க உதவியது. எங்கள் அணியில் இளம் வீரர்கள் உள்ளனர். எங்கள் அணியினர் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
இந்தியாவும், இலங்கையும் இதுவரை 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அவற்றில் இந்திய அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை.
இன்று போட்டி நடைபெற உள்ள கொழும்பு பிரேமதாசா மைதானம் இந்திய அணிக்கு மிகவும் சாதகமான மைதானமாகவே உள்ளது. இந்திய அணி இந்த மைதானத்தில் 2018ம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக 176 ரன்களை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து குவித்துள்ளது. 2009ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்துள்ளது.
பிரேமதாசா மைதானத்தில் 12 போட்டிகளில் 268 ரன்களை இங்கு குவித்துள்ளார். விராட்கோலி 6 போட்டிகளில் 267 ரன்களை குவித்துள்ளார்.