வாழ்வா சாவா போட்டியில் இலங்கை! பேட்டிங் செய்யும் நியூசிலாந்து.. சுருட்டுவார்களா ஷனக்கா தம்பிகள்
இலங்கை அணி தங்களது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது, நியூசிலாந்து அணி தனது முதல் போட்டி மழையால் ரத்தானது. இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடும்

டி20 உலகக்கோப்பை தொடரின் மிக முக்கிய சூப்பர் 8 போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன, இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அரையிறுதி செல்லுமா இலங்கை:
இலங்கை அணி தங்களது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது, நியூசிலாந்து அணி தனது முதல் போட்டி மழையால் ரத்தானது. இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடும். அதனால் இந்த இரு அணிக்குளுக்கும் மிக முக்கியமான போட்டியாகும். இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பீல்டிங் தேர்வு செய்தாr
அணி விவரம்:
இலங்கை (பிளேயிங் லெவன்): பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ்(வ), சரித் அசலங்கா, பவன் ரத்நாயக்க, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக(கேட்ச்), துனித் வெல்லலகே, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, மகேஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்கா
நியூசிலாந்து பிளேயிங் லெவன்): டிம் சீஃபர்ட்(wk), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திர, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர்(c), கோல் மெக்கோஞ்சி, மேட் ஹென்றி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன்.
நேருக்கு நேர்:
நியூசிலாந்தும் இலங்கையும் டி20 போட்டிகளில் மோதுவது இது 29வது முறையாகும். இதுவரை இரு அணிகளுக்கும் இடையே நடந்த 28 போட்டிகளில் 11 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு போட்டி எந்த முடிவும் இல்லாமல் முடிந்தது.





















