(Source: ECI/ABP News/ABP Majha)
Harleen deol | 'அட்டகாசமான கேட்ச்..அடித்துத்தூக்கிய ஹர்லீன் '- வைரலாகும் ஹர்லீன் தியோல் கேட்ச்..!
இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் ஹர்லின் தியோல் பிடித்த கேட்ச் வைரலாகி வருகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்தச் சூழலில் நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 தொடர் தொடங்கியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபில்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து வீராங்கனைகள் தொடக்கம் முதலே சற்று அதிரடி காட்டினர். இந்திய அணியின் ஃபில்டிங் போட்டி முழுவதும் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட்டை தீப்தி சர்மா சிறப்பாக ரன் அவுட் ஆக்கினார். இதன்பின்னர் சிறப்பாக பேட்டிங் செய்து வந்த ஏமி ஜோன்ஸ் 43 ரன்கள் அடித்திருந்த போது ஆட்டத்தின் 19ஆவது ஒவரில் ஷிகா பாண்டே பந்துவீச்சில் பந்தை சிகருக்கு விரட்ட முற்பட்டார். அப்போது பவுண்டரி எல்லை கோட்டில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஹர்லின் தியோல் அசத்தலாக டைவ் செய்து பந்தை உள்ளே தட்டிவிட்டு மீண்டும் உள்ளே வந்து லாவகமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.
அவரின் இந்த கேட்ச் மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்த கேட்சை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அத்துடன் இந்த கேட்ச் ட்விட்டர் தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. பலரும் இந்த கேட்சை வியந்து பார்த்து வருகின்றனர். இந்தப் போட்டில் 20ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் பந்திலேயே ஷெபாலி வர்மா ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதைத் தொடந்து வந்த ஹர்லின் தியோ ஸ்மிருதி மந்தனா உடன் ஜோடி சேர்ந்தார்.
A fantastic piece of fielding 👏
— England Cricket (@englandcricket) July 9, 2021
We finish our innings on 177/7
Scorecard & Videos: https://t.co/oG3JwmemFp#ENGvIND pic.twitter.com/62hFjTsULJ
இருவரும் இந்திய அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். 8.4 ஓவர்களில் இந்திய அணி 54 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து இருந்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நிற்காததால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்று இருந்தது. இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: 'சுனில் கவாஸ்கரும் டெஸ்ட் போட்டிகளும்'- தீராத காதல் பயணம் : ஹேப்பி பர்த்டே கவாஸ்கர்..!