Ind vs Eng 4th Test: உமேஷ் 150: விக்கெட்டோடு தொடங்கிய இந்தியா... டிக்கெட் வாங்கும் இங்கிலாந்து! 2ம் நாள் ஆட்டம் பரபர!
இன்றைய நாளின் முதல் விக்கெட்டை எடுத்ததன் மூலம், டெஸ்ட் அரங்கில் தனது 150 வது விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ் யாதவ்.
லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான் இன்று, ஆரம்பத்திலேயே உமேஷ் யாதவ் விக்கெட் எடுத்து இந்திய அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை தந்துள்ளார். முதல் நாள் முடிவில், யுமேஷ் யாதவின் பந்துவீச்சில் இங்கிலாந்தின் நம்பிக்கை பேட்ஸ்மேனான ரூட் அவுட்டாகினார். இதனால், மாலன் மற்றும் ஓவர்டன் ஆகியோர் பேட்டிங் களத்தில் இருந்தனர். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து அணி.
இந்நிலையில், இன்று வந்தவுடன் ஓவர்டன் விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து ரன் சேர்ப்புக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் உமேஷ் யாதவ். இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் உமேஷ் யாதவின் 150-வது விக்கெட்.அவரைத் தொடர்ந்து, மாலன் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ள உமேஷ், இந்தியாவுக்கு நம்பிக்கை தருகிறார். இரண்டாம் நாள் ஆட்டதில் தற்போதைய நிலவரப்படி, 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. பேர்ஸ்டோ மற்றும் போப் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
150 Test wickets Umesh Yadav.
— Ashish Magotra (@clutchplay) September 3, 2021
96 @ 24.54 at home Tests
54 @ 40.38 in away matchespic.twitter.com/UqwigX7JEY
நேற்று, டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 61.3 ஓவர்கள் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி, ஷர்துல் தாகூரின் அரை சதங்கள் அணியின் ஸ்கோரை 191 வரை கொண்டு செல்ல உதவியது.
Umesh Yadav provides India with an early breakthrough on day two 🙌
— ICC (@ICC) September 3, 2021
Nightwatchman Craig Overton goes for 1. #WTC23 | #ENGvIND | https://t.co/zRhnFj1Srx pic.twitter.com/CoHll5c2EN
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு டாப் ஆர்டரும், மிடில் ஆர்டரும் சரிந்த நிலையில் டெயில் எண்டராக களமிறங்கிய ஷர்துல் தாகூர் அரை சதம் கடந்து அசத்தினார்.3 சிக்சர், 7 பவுண்டரிகள் உள்பட 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவுட்டாகினார் ஷர்துல் தாகூர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை டி20 போட்டியைப் போல விளையாடிய ஷர்துல், இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால், முதல் இன்னிங்ஸ் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்தார் பும்ரா. அவர் வீசிய முதல் ஓவரிலேயே ஓப்பனிங்ஸ் பேட்ஸ்மேன் பர்ன்ஸ் பவுல்டானார். அதே ஓவரில் ஹசீப் ஹமீதும் டக்-அவுட்டாக இரண்டு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறத் தொடங்கியது. அவர்களைத் தொடர்ந்து கேப்டன் ஜோ ரூட், டேவிட் மாலன் இணை ரன் சேர்க்க களமிறங்கியது. ஆனால், யுமேஷ் யாதவின் பந்துவீச்சில் ரூட் அவுட்டானது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.