India vs Australia T20: டாப் 7 பேட்ஸ்மேன்கள்! 5 பேர் இடது கை வீரர்கள் - ஆஸ்திரேலியாவை அச்சுறுத்துமா இளம்படை?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் விளையாடும் டாப் 7 வீரர்களில் 5 பேர் இடது கை பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.
கடந்த நவம்பர் 19 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதன்படி , 6 வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெற்றது பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இந்த தோல்வி இந்திய வீரர்களை வெகுவாக பாதித்தது.
முன்னதாக, இந்திய அணி தோல்வி பெற்றதால் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்டோர் கண்கலங்க மற்ற வீரர்கள் அவர்களை தேற்றினார்கள். இதனிடையே கே.எல்.ராகுல் உலகக் கோப்பை தோல்வியின் வழி இன்னும் இருக்கிறது என்று எக்ஸ் பக்கத்தில் வேதனை தெரிவித்து இருந்தார்.
டி20 போட்டிகள்:
இச்சூழலில் தான் உலகக் கோப்பை போட்டிகள் முடிந்து 4 நாட்களுக்கு பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை டி 20 போட்டியில் எதிர்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி, சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டிகள் கேரளாவில் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முன்னதாக இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, கே.எல்.ராகுல் உள்ளிட்டோருக்கு இந்த டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
5 இடது கை பேட்ஸ்மேன்கள்:
இந்நிலையில் விசாகபட்டிணத்தில் இன்று (நவம்பர் 23) நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி சார்பில் களம் இறங்கும் முதல் 7 இடங்களில் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் களம் காண உள்ளனர்.
அதன்படி, ஜெய்ஸ்வால், திலக் வர்மா, இஷான் கிஷன், ரிங்கு சிங்,அக்சர் படேல் ஆகிய வீரர்கள் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதால் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சற்று கடினமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
முன்னதாக, சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்ற சூழலில், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் இங்கிலிஷ் சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலியா 208 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது.
மேலும் படிக்க: KL Rahul: உலகக் கோப்பை தோல்வி; "இன்னும் வலிக்கிறது...” - இதயம் நொறுங்கிய கே.எல்.ராகுல்!
மேலும் படிக்க: Rohit - Virat Kohli: ”அடுத்த டி20 உலகக்கோப்பையிலும் ரோகித், விராட் கோலி ஆட வேண்டும்” - கெளதம் கம்பீர் ஆசை