Watch video : இந்திய வீரரின் கன்னத்தில் அறைந்த ஆப்கானிஸ்தான் வீரர்.! ஷாக்கான பார்வையாளர்கள்! வைரல் வீடியோ!
ஆசிய கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் வீரர்கள் சண்டை போட்டுக்கொண்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானை 2- 1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி ஒரு அற்புதமான ஃப்ரீ-கிக் மூலம் முதல் கோலை பதிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்டு ரசிகர்கள் ஆங்காங்கே வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்து வந்தனர்.
#ACQ2023 #IndianFootball ⚽
— The Field (@thefield_in) June 11, 2022
🇮🇳 2-1 🇦🇫
SAHAL ABDUL SAMAD!
What scenes at the end.
📽 Indian Football pic.twitter.com/w5kE3QmHpY
இந்திய அணிக்கு எதிராக முதலில் கோல் அடிக்க ஆப்கானிஸ்தான் கடுமையாக முயற்சி செய்தது. அதன் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் பார்வர்ட் வீரர் அடிக்க முயற்சி செய்த கோலை இந்திய அணியின் கோல் கீப்பர் லாபகரமாக தடுத்தார். இருப்பினும் சில நிமிடங்களில் கார்னர் கிக்கை தலையால் முட்டி ஆப்கானிஸ்தான் 1 - 1 என்று கோலை சமன் செய்தது.
இந்தநிலையில், கடைசி நேரத்தில் ஆஷிக் குருணியன் சில வேகமான கால் நகர்வுகளால் ஆப்கானிஸ்தான் கோல் கீப்பருக்கு நெருக்கமாக சென்றது. அந்த நேரத்தில் நெட்டுக்கு பக்கத்தில் இருந்த இந்திய வீரர் சாஹல் அப்துல் சமத் சிறப்பாக தனது கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்ற இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
India vs Afghanistan Fight 🔥🔥#IndianFootball #ISL #BlueTigers pic.twitter.com/jlvU1P8CKe
— Navaneed M 🏳️🌈 (@mattathil777777) June 12, 2022
இப்படி சிறப்பான போட்டிக்கு நடுவே ஒரு கலவரம் நடந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா..? அதுவும் இந்த போட்டியில் நடந்தது. இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு நடுவே முதலில் வாக்குவாதமாக நடைபெற்ற சண்டை கைகலப்பாக மாறியது. ஒரு ஆப்கானிஸ்தான் ரிசர்வ் வீரர் இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்துவின் முகத்தில் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரப்பரப்பு ஏற்பட்டு நடுவர்கள் வந்து சமாதானம் செய்து வைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்