மேலும் அறிய

Shardul Thakur: "ஷர்துல் தாக்கூர் தொட்டதெல்லாம் பொன்" - சுனில் கவாஸ்கர் புகழாரம்

ஷர்துல் தாக்கூர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது என்று முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூடியுள்ளார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 127 ரன்கள் அடித்த ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ரோகித் சர்மாவைப் போல இந்தியாவின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் ஷர்துல் தாக்கூர். ஷர்துல் தாக்கூர் முதல் இன்னிங்சில் 57 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 60 ரன்களையும் எடுத்தார். மேலும், இரு இன்னிங்சிலும் சேர்த்து மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தின் முக்கிய விக்கெட்டுகளான ரோரி பர்ன்ஸ் மற்றும் அபாயகரமான ஆட்டக்காரர் ஜோ ரூட்டை ஆட்டமிழக்க செய்தார்.

Shardul Thakur:

இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஷர்துல் தாக்கூருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், “ இந்த தருணத்தை பார்க்கும்போது, ஷர்துல் தாக்கூர் எதை தொட்டாலும் பொன்னாக மாறுகிறது. அதாவது, அவர் ஆடிய சில ஷாட்கள் மிகவும் அற்புதமானவை. ஸ்ட்ரெய்ட் டிரைவில் அவர் அடித்த சிக்ஸ். அதை பார்த்தவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர் நம்பிக்கையுடன் பேட் செய்ததை பார்க்க முடிந்தது. அதுதான் மிகவும் கவர்ந்தது.

இங்கிலாந்து மைதானத்தில் அவர் பந்துவீசியது மிகவும் அற்புதமாக, நேர்த்தியாக இருந்தது. இடது கை பேட்ஸ்மேனான ரோரி பர்ன்ஸ் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். அவருக்கு இடது புறத்தில் அற்புதமாக பந்துவீசி அவரை வீழ்த்தினார். பின்னர், ஜோ ரூட்டை வீழ்த்தினார். ஜோ ரூட்டிற்கு பந்தை கீழே வீசி, பந்து பேட்டில் பட்டு எட்ஜ் ஆகியதால் ஜோ ரூட் அவுட்டானார்.

ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சிலும் தனது பங்களிப்பை அளிக்கிறார். பேட்டிங்கிலும் தனது பங்களிப்பை அளிக்கிறார். இந்திய அணி 8ம் நிலைக்கான வீரரை கண்டறிந்துள்ளது.” இவ்வாறு அவர் ஷர்துல் தாக்கூருக்கு புகழாரம் சூடியுள்ளார்.

Shardul Thakur:

ஷர்துல் தாக்கூரின் இந்தாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அந்த நாட்டின் கப்பா மைதானத்தில் 67 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஷர்துல் தாக்கூர் தொடர்ந்து அயல்நாட்டு மண்ணில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார்.

இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள 29 வயதான ஷர்துல் தாக்கூர் டெயிலண்டராகவே களமிறங்கி 190 ரன்களை குவித்துள்ளார்.  அவற்றில் மூன்று அரைசதங்கள் அடங்கும். இந்த மூன்று அரைசதங்களும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் அடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 4 டெஸ்ட் போட்டிகளில் ஷர்துல் தாக்கூர் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

Ind vs Eng 4th Test: கோலாகலப்படுத்திய கோலி படை....இங்கி., படுதோல்வி... 50 ஆண்டுகளுக்கு பின் இந்தியா இமாலய வெற்றி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget