Kohli to Journalist: ஏதாச்சு வித்தியாசமா செய்வீங்களா? கோலியின் ஒரு வார்த்தை பதில் - இணையத்தில் வைரல்
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அவரது ஏற்பாடுகள் குறித்து கோலியிடம் கேட்கப்பட்டது.
செய்தியாளரிடம் விராட் கோலியின் நகைச்சுவையான ஒரு வார்த்தை பதில் இணையத்தை வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி தனது இயல்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார். களத்தில் இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, கோலி தனது மனதில் இருப்பதை வெளிப்படுத்த தயங்குவதில்லை. இங்கிலாந்து - இந்தியா தொடருக்கு முன்னதாக ஆன்லைன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ஒரே ஒரு வார்த்தையில் பதில் அளித்து, பத்திரிகையாளரை கேலி செய்துள்ளார்.
😭😭😭 pic.twitter.com/qmkQHYXtWz
— Adish 🏏 (@36__NotAllOut) August 5, 2021
கோலியின் சாதனையை குறிப்பிடுவதற்கு முன், இங்கிலாந்து வரவிருக்கும் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவிப்பதன் மூலம் பத்திரிகையாளர் பேட்டியை தொடங்கினார். இந்திய கிரிக்கெட் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது கோஹ்லி சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த ஆட்டக்காரராக இருந்தார். ஏனெனில் அவர் 10 இன்னிங்ஸ்களிலிருந்து இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்கள் உட்பட 593 ரன்கள் எடுத்தார்.
"கோலி, கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். நீங்கள் எங்காவது சுற்றுப்பயணம் செய்யும்போது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். ஒவ்வொருவரின் கண்களும் எப்போதும் உங்கள் மீதுதான் இருக்கும். எனவே, இந்தத் தொடரில் சிறந்த செயல்திறனுக்காக நீங்கள் வேறு ஏதாவது வித்தியாசமாக செய்யப் போகிறீர்களா? ” என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். கோலி இறுக்கமான முகத்துடன் கேமராவைப் பார்த்து, "நஹி" (இல்லை) என்று பதிலளித்தார். செய்தியாளர் அடுத்த கேள்விக்கு நகர்ந்தார். இருப்பினும், சமூக ஊடகங்களில் கோலியின் இந்த பதிலை கிண்டல் செய்து நெட்டிசன்கள் மீம் போட்டு காலய்த்து தள்ளினார்கள்.
விராட் கோலியின் சிறப்பான தொடக்கம் இல்லை
ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் தொடக்கத்தில், விராட் கோலி மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் புகழ்பெற்ற போட்டி மீண்டும் தொடங்கியது. ஆண்டர்சன் கோலியை கோல்டன் டக் அவுட் செய்தார். 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இருவரும் எதிரும் புதிருமாக இருந்தனர். அந்த சுற்றுப்பயணத்தி நான்கு முறை ஆட்டமிழந்த கோஹ்லி,10 இன்னிங்ஸ்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்ச ஸ்கோர் 39.
இருப்பினும், 2018 ஆம் ஆண்டில், கோஹ்லி தனது தவறை திருத்திக்கொண்டார். ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை திறம்பட எதிர்கொண்டு பாராட்டுகளை பெற்றார். பலரின் பாராட்டை பெற்ற கோஹ்லி. அனைவரையும் கவர்ந்தார். அதே நேரத்தில், 2018 சுற்றுப்பயணத்தில் ஆண்டர்சன் ஒரு முறை கூட கோஹ்லியின் விக்கெட் எடுக்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.
2021 இங்கிலாந்து தொடரில் பேட்டிங் செய்ய இன்னும் ஒன்பது வாய்ப்புகள் இருப்பதால், கடந்தகால தவறுகளை மீண்டும் செய்யாமல், ரன் மிஷினாக கருதப்படும் கோஹ்லி திரும்பவும் தனது பழைய ஃபார்மிற்கு திரும்புவார் என்று அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற