Ind vs Eng: “லார்ட்ஸ் மைதானமே அதிரணும்” வைரல் வீடியோவுக்கு காரணம் கோலி கொடுத்த ஐடியாதான்!
இன்னிங்ஸ் முடிந்தவுடன், ஷமி - பும்ரா அமைத்த பேட்டிங் கூட்டணிக்கு மொத்த அணியுமே லார்ட்ஸ் மைதானத்தின் பெவிலியனில் நின்று ஆரவாரமாக வரவேற்றது.
![Ind vs Eng: “லார்ட்ஸ் மைதானமே அதிரணும்” வைரல் வீடியோவுக்கு காரணம் கோலி கொடுத்த ஐடியாதான்! Ind vs Eng: Coach R Sridhar Reveals Virat Kohli Plan to Welcome Bumrah, Shami at Lord's Ind vs Eng: “லார்ட்ஸ் மைதானமே அதிரணும்” வைரல் வீடியோவுக்கு காரணம் கோலி கொடுத்த ஐடியாதான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/7762871c76bed3f5927a2cacc0456d22_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த ஆகஸ்டு 16-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்திய அணி விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸின்போது, 9-வது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்த பும்ரா - ஷமி ஆகியோர் 89 ரன்கள் சேர்த்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்திய அணியின் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் முக்கிய பார்டனர்ஷிப் இது. இன்னிங்ஸ் முடிந்தவுடன், ஷமி - பும்ரா அமைத்த பேட்டிங் கூட்டணிக்கு மொத்த அணியுமே லார்ட்ஸ் மைதானத்தின் பெவிலியனில் நின்று ஆரவாரமாக வரவேற்றது.
இந்திய அணி வீரர்கள், ஷமி - பும்ராவை வரவேற்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து பேசிய இந்திய அணி ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பேட்டிங் பார்ட்னர்ஷிப்பில் அசத்தி பெவிலியன் திரும்பும் இந்திய அணி வீரர்களுக்கு லார்ட்ஸ் மைதானமே அதிரும் வகையில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென ஐடியா கொடுத்ததே கேப்டன் கோலிதான் என தெரிவித்துள்ளார். ”மொத்த அணியும் கைத்தட்டி, உற்சாகமாக அவர்களை வரவேற்க வேண்டும். லார்ட்ஸ் மைதானம் முழுவதும் அதிர்வலைகள் ஒலிக்க வேண்டும்” என கோலி சொன்னதாக ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
A partnership to remember for ages for @Jaspritbumrah93 & @MdShami11 on the field and a rousing welcome back to the dressing room from #TeamIndia.
— BCCI (@BCCI) August 16, 2021
What a moment this at Lord's 👏👏👏#ENGvIND pic.twitter.com/biRa32CDTt
போட்டியின் கடைசி நாளன்று, இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் 2014-ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. அத்துடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்று அசத்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
இந்திய அணி வெற்றி பெற்ற அந்த நாள், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு நாளாகவே அமைந்துவிட்டது. கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆல்-ரவுண்டிங் பெர்ஃபாமென்ஸைக் கொடுத்து வெற்றியை ஈட்டியுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித், புஜாரா - ரஹானே பேட்டிங், பண்ட் - ஜடேஜா பேட்டிங், டெயில் எண்டர்களின் ரன் குவிப்பு, வேகப்பந்துவீச்சாளர்களின் அதிரடி என ஒரு அணி வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளது இந்திய அணி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)