மேலும் அறிய
ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கிச் சுடுதல் அணியில் தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் கலந்துகொள்ள உள்ள இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இளவேனில் வாலறிவன்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்தாண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டதால் இந்தாண்டு நடைபெறுகிறது.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய சுடுதல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், உலகளவில் முதல் இடத்தில் உள்ள கடலூரைச் சேர்ந்த 21 வயதுடைய இளவேனில் வாலறிவன் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதே பிரிவில், மற்றொரு வீராங்கனை அபூர்வி சண்டேலா தேர்வாகியுள்ளார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















