மேலும் அறிய

ICC Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசை : டாப் 10 இடங்களை பிடித்த விராட், ரோஹித், பந்த்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பந்துவீச்சில் இந்திய அணி வீரர் ஒருவர் மட்டுமே டாப் 10-இல் உள்ளார்!

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 5-வது இடத்திலும், ரோஹித் சர்மா & ரிஷப் பந்த் ஆகியோர் 6-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது இந்திய பேட்ஸ்மேன் மூவர் முதல் 10 இடத்தில் உள்ளனர். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 895 ரேட்டிங் புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். அண்மையில் புதிதாக இங்கிலாந்து அணியுடனான போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி இரட்டை சதம் விளாசிய நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே 77-வது இடத்தில் தரவரிசை பட்டியலுக்குள் நுழைந்துள்ளார். 

மேலும் அறிய : மாஸ்க் அணிவது பழசு - வாயில் டேப் அணியும் பொல்லார்ட் ஸ்டைல் : ஐ.பி.எல் வேடிக்கைகள்!

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் labuschagne 878 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 836 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 814 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். 

ICC Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசை : டாப் 10 இடங்களை பிடித்த விராட், ரோஹித், பந்த்!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா & விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் 747 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

பேட்டிங்கில் இப்படி இந்திய வீரர்கள் மூவர் டாப் 10-இல் உள்ள நிலையில் பந்துவீச்சில் இந்திய அணி வீரர் ஒருவர் மட்டுமே டாப் 10 தரவரிசையில் உள்ளார். தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 850 ரேட்டிங் புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அதேநேரம் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்துவருகிறார்.

ICC Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசை : டாப் 10 இடங்களை பிடித்த விராட், ரோஹித், பந்த்!

அண்மையில் இங்கிலாந்து அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்கள் கைப்பற்றிய நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் டிம் சவூதி 3-வது இடத்திற்கு  838 புள்ளிகளுடன் முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹாஸல்வூட் 816 புள்ளிகள், நியூசிலாந்து வீரர் நீல் வாக்னர் 816 புள்ளிகளுடன் 4-வது மற்றும் 5-வது இடத்தில் நீடிக்கின்றனர். ஆல் ரவுண்டர் தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் 423 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 353 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Lok Sabha Election LIVE :  விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு!
TN Lok Sabha Election LIVE : விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு!
Kushboo:
Kushboo: "Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Soundarya Rajinikanth : ’கண்டிப்பா ஓட்டு போடுங்க! இது நம்ம கடமை” ரஜினி மகள் அட்வைஸ்Anbumani Daughter : ”நல்ல பிரதமரை தேர்ந்தெடுக்க போறோம்” அன்புமணி மகள் மகிழ்ச்சிLok Sabha Elections 2024  : பரந்தூர் விவகாரம் தேர்தலை புறக்கணித்த மக்கள்..வெறிச்சோடிய வாக்கு மையம்OPS slams EPS : ”அதிமுக என்கிட்ட வந்துரும்! அ.மலை சரியா சொன்னாரு” OPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Lok Sabha Election LIVE :  விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு!
TN Lok Sabha Election LIVE : விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு!
Kushboo:
Kushboo: "Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Nainar Nagendran: தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
Manipur Firing: வாக்குச்சாவடியில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள்.. மணிப்பூரில் தொடர் பதற்றம்!
வாக்குச்சாவடியில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள்.. மணிப்பூரில் தொடர் பதற்றம்!
Tamil Nadu Election 2024: இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
Embed widget