ICC Test Rankings: ஒரே ஒரு டெஸ்ட்... ஒட்டு மொத்த டீமும் ரேங்க் எடுத்திடுச்சு... டாப்-10ல் இந்திய வீரர்கள்!
ஓவல் டெஸ்டில் மறக்க முடியாத பர்ஃபாமென்ஸை பதிவு செய்ததன் காரணமாக, தனது டெஸ்ட் கிரிக்கெட் கரியரில் முதல் முறையாக டாப்-20 இடத்தில் தடம் பதித்திருக்கிறார் ஷர்துல்.
இந்த வாரத்திற்கான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா, கேப்டன் விராட் கோலியை ஆகியோர் டாப்-10 இடங்களைப் பிடித்துள்ளனர். 813 புள்ளிகளுடன் ரோஹித் ஐந்தாவது இடத்திலும், 783 புள்ளிகளுடன் விராட் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.
கடந்த வாரம் வெளியான ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், தனது டெஸ்ட் கிரிக்கெட் கரியரில் முதல் முறையாக டாப் 5 இடத்திற்கு ரோஹித் ஷர்மா முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையே இந்த வாரமும் தக்க வைத்திருக்கும் அவர், தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார். இதனால், கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் டாப் ஐந்து இடங்களில் இருக்கும் ஒரே இந்திய பேட்ஸ்மேனானார் ரோஹித் ஷர்மா.
↗️ Woakes enters top 10 in all-rounders list
— ICC (@ICC) September 8, 2021
↗️ Bumrah moves up one spot in bowlers rankings
The latest @MRFWorldwide ICC Men's Test Player Rankings 👉 https://t.co/xgdjcxK2Tq pic.twitter.com/yOyxsdXLp4
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பெளலர்கள் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணி வீரர்களைப் பொருத்தவரை, 831 புள்ளிகளுடன் ரவிசந்திரன் அஷ்வின் அதே இரண்டாவது இடத்திலும், 771 புள்ளிகளுடன் பும்ரா ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர். முன்னதாக, கடந்த வாரம் 759 புள்ளிகளுடன் பும்ரா பத்தாவது இடத்தில் இருந்தார்.
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், 157 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியை வென்றது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் பேட்டிங், பெளலிங் என இந்திய அணி வீரர்கள் தனித்தனியே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அந்த வரிசையில், ஐசிசி கிரிக்கெட் ஆல்-ரவுண்டர்களுக்கான டெஸ்ட் ரேங்கிங்கில் 338 புள்ளிகளுடன் ஜடேஜா மூன்றாவது இடத்திலும், 162 புள்ளிகளுடன் ஷர்துல் தாகூர் இருபதாவது இடத்திலும் உள்ளனர். தனது டெஸ்ட் கிரிக்கெட் கரியரில் முதல் முறையாக டாப்-20 இடத்தில் தடம் பதித்திருக்கும் ஷர்துல், ஓவல் டெஸ்டில் மறக்க முடியாத பர்ஃபாமென்ஸை பதிவு செய்ததன் காரணமாக ரேங்கிங்கில் முன்னேறியுள்ளார்.
India Records: ஜெயிச்சது மட்டும் தானே தெரியும்... சைலண்டா ரெக்கார்டு பண்ணிருக்காங்க பசங்க!