ICC Test Ranking: சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்: முதலிடத்தை பிடித்த மார்னஸ் லபுசானே.. கிங் கோலியின் நிலை என்ன?
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலமாக ஆஸ்திரேலியா வீரர் மார்னஸ் லபுசானே டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற இடத்தை மார்னஸ் லபுசானே பிடித்து சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடியதால் அவர் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.
மார்னஸ் லபுசானே தனது கிரிக்கெட் வாழ்க்கையிலே முதன்முறையாகவும், அதே சமயத்தில் சிறந்த தரவரிசையாகவும் 912 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடாததால் 1 இடம் பின்னோக்கி 897 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதற்கடுத்த இடங்கள் எந்தவித மாற்றமுமின்றி அதே வரிசைப்படி தொடர்கிறது. மூன்றாவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தும், நான்காவது இடத்தில் கனே வில்லியம்சனும், 5வது இடத்தில் ரோகித் சர்மாவும், 6வது இடத்தில் டேவிட் வார்னரும், 7வது இடத்தில் விராட்கோலியும் உள்ளனர்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டன் பாட்கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 883 புள்ளிகளுடன் இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் உள்ளார். மூன்றாவது இடத்தில் ஷாகின் ஷா அப்ரிடி உள்ளார். டிம் சவுதி ஒரு இடம் முன்னேறி நான்காவது இடம் பிடித்த நியூசிலாந்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 382 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் 360 புள்ளிகளுடன் உள்ளார். மூன்றாவது இடத்தில் வங்காளதேச வீரர்கள் ஷகிப் அல் ஹசன் 338 புள்ளிகளுடன் இடம்பிடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலுக்கான சிறந்த அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி 3 ஆயிரத்து 465 புள்ளிகளுடனும், 124 ரேட்டிங்ஸ்களுடனும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி 121 ரேட்டிங்ஸ்களுடனும், 3 ஆயிரத்து 21 புள்ளிகளுடன் இடம்பிடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 108 ரேட்டிங்ஸ்களுடனும் ஆயிரத்து 844 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
Gold-Silver Rate, 21 Dec: சென்னையில் இன்று தங்கம் விலை எவ்வளவு குறைவு தெரியுமா?
83 Movie Review: கோப்பையை வென்ற கபில், மனதை வென்றாரா? சுடச்சுட ‛83’ ரிவியூ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்