Graham Reid : உலகக்கோப்பை தோல்வி எதிரொலி... அதிரடியாக தனது பதவியை ராஜினாமா கிரஹாம் ரீட்.. முழு விவரம் இதோ!
இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
India Head Coach Graham Reid: ஒடிசாவில் நடந்த நடந்த ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையில் இந்திய அணியால் காலிறுதிக்கு தகுதி பெற முடியவில்லை. இதையடுத்து, இந்திய ஹாக்கி அணியில் பல முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தங்களது ராஜினாமாக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி, இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரை தொடர்ந்து, பகுப்பாய்வு பயிற்சியாளர் கிரெக் கிளார்க் மற்றும் அறிவியல் ஆலோசகர் மிட்செல் டேவிட் பெம்பர்டன் ஆகியோர் இன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை ஹாக்கி இந்தியாவும் ஏற்றுக்கொண்டது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் கிரஹாம் ரீடின் பயிற்சியாளரின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி, ஒடிசாவில் நடந்த உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறத் தவறி 9வது இடத்தைப் பிடித்தது. ஹாக்கி இந்தியா வெளியிட்ட அறிக்கையின்படி, உலகக் கோப்பை முடிந்த ஒரு நாள் கழித்து ரீட் தனது ராஜினாமா கடிதத்தை ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கியிடம் சமர்ப்பித்தார். டிர்கி மற்றும் ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலநாத் சிங் ஆகியோர் ரீட் மற்றும் பிற துணை ஊழியர்களை சந்தித்து அணியின் செயல்திறன் குறித்து விவாதித்தனர்.
மூன்று மாதங்கள் நோட்டீஸ் பீரியட்:
கிரஹாம் ரீட், கிளார்க் மற்றும் டேவிட் ஆகியோர் இன்று காலை ராஜினாமா கடிதத்தை தொடர்ந்து, மூன்று பேருக்கும் மூன்று மாதம் நோட்டீ காலம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிரஹாம் ரீட் தெரிவிக்கையில், "நான் பதவி விலகி புதிய நிர்வாகத்திடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டிய நேரம் இது.இந்த அணி மற்றும் ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அற்புதமான பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்தேன். அணிக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்தார்.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியா:
கிரஹாம் ரீட் தலைமையின் பயிற்சியின் கீழ் இந்திய ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கலம் வென்றது. தொடர்ந்து, பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளியும், FIH புரோ லீக் 2021-22 சீசனில் மூன்றாவது இடத்தையும் பெற்றது.
அதேபோல், கடந்த 2019ம் எஃப்ஐஎச் உலகத் தொடர் இறுதிப் போட்டியில் வென்றது. இதன் பிறகு, புவனேஸ்வரில் நடந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று டோக்கியோ விளையாட்டுப் போட்டிக்கு தகுதிபெற்றது.
ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கி வெளியிட்ட அறிக்கை:
கிரஹாம் ரீட் உட்பட மூவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டிர்கி, "எங்களுக்கு நல்ல பலனைத் தந்த கிரஹாம் ரீட் மற்றும் அவரது அணிக்கு இந்தியா எப்போதும் கடமைப்பட்டிருக்கும்” என்றார். தொடர்ந்து, ”ஒலிம்பிக் போட்டிகளில், ஒவ்வொரு பயணத்திலும் புதிய கட்டங்கள் உள்ளன. இப்போது நாமும் அணிக்காக ஒரு புதிய சிந்தனையுடன் முன்னேற வேண்டும்.” என்றார்.
இந்திய ஆடவர் ஹாக்கி அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அர்ஜென்டினாவுடன் இணைந்து 9வது இடத்தைப் பிடித்தது.