மேலும் அறிய

Glenn Maxwell: மேக்ஸ்வெல் மனைவிக்கு தகாத மெசேஜ்! உலகக் கோப்பை தோல்வியால் எல்லை மீறும் ரசிகர்கள்!

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை அடுத்து கிளென் மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன், தன்னை சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை அடுத்து கிளென் மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன், தன்னை சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பதிலடியும் கொடுத்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்:

நேற்று (நவம்பர் 19) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்  2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முன்னதாக, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு சுருண்டது. எளிய இலக்கை நோக்கி சேஸ் செய்த ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்களை எடுத்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது.

வன்மைத்தை கக்கும் விஷமிகள்:

இந்த வெற்றியை அந்த அணியின் வீரர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர்கள் மீது இந்தியாவைச் சேர்ந்த விஷமிகள் சிலர் வன்மத்தைக் கக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும், வீரர்களின் குடும்பத்தினரையும் ஆபாசமாகப் பேசி வசைபாடி வருகின்றனர். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வின்னிங் ஷாட்டை அடித்தவர் கிளென் மேக்ஸ்வெல். இவரது மனைவி வினி ராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 2013 முதல் நண்பர்களாக இருந்து, கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதனிடையே இவரைத்தான் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

வினிராமன் பதிலடி:

View this post on Instagram
 
A post shared by Vini Maxwell (@vini.raman)

இச்சூழலில் சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு வினிராமன் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "வெறுப்புடன் தனிப்பட்ட முறையில் எனக்கு மேசேஜ் அனுப்புபவர்கள் கொஞ்சம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதே சமயம், என் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் என் கணவர் விளையாடும் அணிக்கு நான் ஆதரவாக இருக்க வேண்டும்.

இது சிலருக்குப் புரிவதில்லை. உலகிற்கு எது முக்கியமோ, எது முக்கியமான பிரச்னைகளோ அதில் கவனம் செலுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரது இந்த பதிவு சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: Australian Cricket Team: உலகக் கோப்பை வெற்றி! சபர்மதி ஆற்றில் சவாரி செய்த ஆஸ்திரேலிய அணி - வீடியோ உள்ளே!

மேலும் படிக்க: Selvaraghavan: நாடு தோற்பதை பார்க்க முடியவில்லை.. நெஞ்சம் உடைந்து சிதறியது.. செல்வராகவன் கண்ணீர்மல்க பதிவு!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!

Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!

SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?

Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?

ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?
Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!

Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!

IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை

Telangana: தேர்தல் வாக்குறுதி.. ஒரே வாரத்தில் 500 தெரு நாய்களை கொன்ற அதிகாரிகள்!

Embed widget