Euro 2024 Final: யூரோ கால்பந்து போட்டி - தோல்வியே காணாத ஸ்பெயின் - இங்கிலாந்தை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன்
Euro 2024 Final: யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
Euro 2024 Final: யூரோ கால்பந்து போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில், இங்கிலாந்து அணியை ஸ்பெயின் வீழ்த்தியது.
யூரோ கால்பந்து 2024 இறுதிப்போட்டி:
ஐரோப்பா சாம்பியன் கால்பந்தாட்ட போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் ஸ்பெயின் இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 2012க்குப் பிறகு முதன்முறையாக யூரோ பட்டத்தை வென்றுள்ளது. போட்டியின் முதல் பாதி கோல்கள் இல்லாமல் முடிய, இரண்டாம் பாதியில் ஸ்பெயின் வீரர் நிகோ வில்லியம்ஸ் 47வது நிமிடத்தில் கோல் அடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது.
2024 CHAMPIONS: Spain 🇪🇸#EURO2024 pic.twitter.com/8jGoI5ZSv0
— UEFA EURO 2024 (@EURO2024) July 14, 2024
சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்:
இங்கிலாந்து வீரர் கோல் பால்மர் 73வது நிமிடத்தில் கோல் அடிக்க புள்ளிகள் சமநிலையை எட்டியுள்ளன. போட்டிக்காக ஒதுக்கப்பட்ட நேரம் இறுதிகட்டத்தை நெருங்க நெருங்க அடுத்த கோல் அடிக்கப்போவது யார்? கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயதுடிப்பும் உச்சத்தை எட்ட, போட்டியின் 86வது நிமிடத்தில் மைக்கேல் ஒயர்சபால் கோலடிக்க ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி, ஐரோப்பா கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
Spain win it right at the last 👏#EURO2024 | #ESPENG pic.twitter.com/5FIuNCrncq
— UEFA EURO 2024 (@EURO2024) July 14, 2024
தோல்விகளே இன்றி சாம்பியன் பட்டம்:
யூரோ 2024 பட்டத்தை வெல்லும் பயணத்தில் ஸ்பெயின் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் பல பிரிவுகளில் ஏராளமான சாதனைகளை ஸ்பெயினின் அணி முறியடித்துள்ளது. லூயிஸ் டி லா ஃபுவென்டேஸ் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை வென்ற இறுதிப் போட்டி உட்பட ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் அணியாக உருவெடுத்துள்ளது. அந்த அணியின் லாமின் யமல், 17 வயது மற்றும் 1 வயதில் சாம்பியன் பட்டம் வென்றதால், இளம் வயதில் ஐரோப்பிய சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார். இதன் விளைவாக 1966 முதல் இங்கிலாந்தின் முக்கிய சர்வதேச பட்டத்திற்கான வேதனையான காத்திருப்பு தொடர்கிறது. முன்னதாக ஸ்பெயின் யூரோக் கோப்பையை வென்றபோது, அவர்கள் இறுதிப் போட்டியில் இத்தாலியை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 2020ம் ஆண்டும் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.