Gareth Bale : தொழில்முறைப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார், கால்பந்தாட்ட வீரர் காரெத் பேல்
சவுத்தாம்ப்டன், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், ரியல் மாட்ரிட் மற்றும் LAFC ஆகிய அணிகளுக்கான பேல் விளையாடி வந்த நிலையில் இது முற்றுப்புள்ளி வைக்கிறது
தொழில்முறை கால்பந்தாட்ட வீரரரான கரேத் பேல் தனது 33 வயதில் தொழில்முறை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பேல் தனது சமூக ஊடக பக்கங்களில் திங்கள் அன்று இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சவுத்தாம்ப்டன், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், ரியல் மாட்ரிட் மற்றும் LAFC ஆகிய அணிகளுக்கான பேல் விளையாடி வந்த நிலையில் இது முற்றுப்புள்ளி வைக்கிறது, அதே நேரத்தில் வெல்ஷ் கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
"கவனமான மற்றும் சிந்தனைமிக்க பரிசீலனைக்குப் பிறகு, கிளப் மற்றும் சர்வதேச கால்பந்தில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்" என்று பேல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
"நான் விரும்பும் விளையாட்டில் விளையாட வேண்டும் என்ற எனது கனவை நனவாக்கியதை நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அது உண்மையிலேயே என் வாழ்க்கையின் சில சிறந்த தருணங்களை எனக்குக் கொடுத்துள்ளது. 17 வருடங்களில் நான் பல உயரத்தைத் தொட்டிருக்கிறேன், அது என்னவாக இருந்தாலும், அதை மீண்டும் இனி செய்ய இயலாது. அடுத்த அத்தியாயம் எனக்காக காத்திருக்கிறது." என அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கிளப் கால்பந்தாட்ட விளையாட்டு அளவில், பேல் தனது தொழில்முறை வாழ்க்கையை சவுத்தாம்ப்டனில் தொடங்கினார், அதற்கு அடுத்து அவர் 2007ம் ஆண்டு மே மாதத்தில்ல் டோட்டன்ஹாமிற்குச் சென்றார். அங்கு அவர் லெப்ட் பேக் இடத்துக்கு விளையாடப் பணிக்கப்பட்டார், ஆனால் விரைவில் டோட்டன்ஹாமின் தாக்குதல் வரிசையின் இடது முன்னிலைக்கு மாற்றப்பட்டார். அது அவரை உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவியது.
அவர் பிரீமியர் லீக் அணியில் தனது செயல்பாட்டிற்காக தனிப்பட்ட விருதுகள் பலவற்றை வென்றார், மேலும் செப்டம்பர் 2013ல், மாட்ரிட் அணி 100 மில்லியன் யூரோ உலக சாதனைக்கான ஆறு வருட ஒப்பந்தத்தில் பேலை ஒப்பந்தம் செய்தது.
ஸ்பெயினில், பேல் மூன்று லா லிகா பட்டங்கள், ஒரு கோபா டெல் ரே மற்றும் ஐந்து சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை முறையே 2014, 2016, 2017, 2018 மற்றும் 2022 ஆகிய வருடங்களில் வென்றார். மாட்ரிட் அணி உடனான ஒப்பந்தத்தில் கடைசி காலக்கட்டத்தில் சில சறுக்கல்களைச் சந்தித்தாலும் 2018 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூலுக்கு எதிரான 3-1 வெற்றியில் லாஸ் பிளாங்கோஸ் அணிக்கு அவர் சில வரலாற்று தருணங்களை அவர் உருவாக்கிக்கொடுத்தார் எனலாம்.
மாட்ரிட் அணியுடனான ஒப்பந்த முடிவில் கிளப்பை விட்டு வெளியேறி LAFC உடன் 12 மாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.