FIFA Worldcup 2022: ஒரே பாயிண்ட்டில் அணிகள் இருந்தால் அடுத்து என்ன? - உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் ரூல் இதுதான்!
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு (காலிறுதிக்கு முந்தையச் சுற்று) முன்னேறும். இன்று முதல் மூன்றாவது கடைசி குரூப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.
ஃபிபா விதிகளின்படி, ஒவ்வொரு குரூப்பிலும் கடைசி இரண்டு போட்டிகள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். குரூப் ஏ பிரிவில் கத்தார் அணி வெளியேறிவிட்டது. மற்ற 3 அணிகளுக்கு அடுத்து சுற்றுக்கான வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை ஒரே பாயிண்டுகளை இரு அணிகளும் சமமாக கொண்டிருந்தால் என்ன ஆகும்?
அனைத்து குரூப் ஆட்டங்களிலும் அதிக பாயிண்டுகள் எடுத்த அணி, அனைத்து குரூப் ஆட்டங்களில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வென்ற அணி, அனைத்து குரூப் ஆட்டங்களிலும் அதிக கோல்களை அடித்தது ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு அடுத்த சுற்றுக்கு ஓர் அணி தேர்வு செய்யப்படும்.
ஒருவேளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் பாயிண்டுகளில் சமநிலை கொண்டிருந்தால், சம்பந்தப்பட்ட அணிகள் குரூப் ஆட்டங்களில் எடுத்து பாயிண்டுகள், அதிகபட்ச கோல் வித்தியாசத்தில் எந்த அணிகள் வென்றது. சம்பந்தப்பட்ட அணிகள் அனைத்து குரூப் ஆட்டங்களிலும் அதிகபட்ச கோல்கள் வித்தியாசத்தில் வென்றது. மற்றும் மஞ்சள் அட்டை, சிவப்பு எட்டை எச்சரிக்கைகளைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.
மேலே உள்ள விலக்குகளில் ஒன்று மட்டுமே ஒரு போட்டியில் ஒரு வீரருக்குப் பயன்படுத்தப்படும். அதிக புள்ளிகள் பெறும் அணி அதிக தரவரிசையில் இருக்கும்.
Ronaldo: இனி சவுதி அரேபியாவுக்காக களம் இறங்கும் ரொனால்டோ; வருஷத்துக்கு 75 மில்லியன் டாலர் சம்பளம்..!
இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும்.
மொத்தம் எத்தனை ஆட்டங்கள்
48 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 64 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெறுகின்றன. குரூப் ஏ பிரிவில் உலகக் கோப்பையை நடத்தும் கத்தார், ஈக்குவடார் (4 பாயிண்டுகள்), செனகல் (3 பாயிண்டுகள்), நெதர்லாந்து (4 பாயிண்டுகள்) ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் பி பிரிவில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து (4 பாயிண்டுகள்), ஈரான் (3 பாயிண்டுகள்), யுஎஸ்ஏ (2 பாயிண்டுகள்), வேல்ஸ் (1 பாயிண்ட்)ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் சி பிரிவில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டீனா இடம்பெற்றுள்ளது. இதேபிரிவில், சவுதி அரேபியா (3 பாயிண்டுகள்), மெக்ஸிகோ (1 பாயிண்ட்), போலந்து (4 பாயிண்டுகள்) ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. அர்ஜென்டீனா அணி (3 பாயிண்டுகள்) இரு முறை (1978, 1986) உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த அணியை நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டீனா அணி சர்வதேச தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ளது.
குரூப் டி
இந்தப் பிரிவில் பிரான்ஸ் (6 பாயிண்ட்), டென்மார்க் (1 பாயிண்ட்), துனிசியா(1 பாயிண்ட்), ஆஸ்திரேலியா(3 பாயிண்ட்) ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் இ
இந்தப் பிரிவில் ஸ்பெயின்(4 பாயிண்ட்), ஜெர்மனி(1 பாயிண்ட்), ஜப்பான்(3 பாயிண்ட்), கோஸ்டா ரிகா(3 பாயிண்ட்) ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் எஃப்
பெல்ஜியம்(3 பாயிண்ட்) , கனடா (0 பாயிண்ட்), மொராக்கோ(4 பாயிண்ட்) , குரேஷியா (4 பாயிண்ட்) ஆகிய அணிகளும், குரூப் ஜி பிரிவில் 5 முறை சாம்பியனான பிரேசில் (6 பாயிண்ட்) , செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. குரூப் எச் பிரிவில் போர்ச்சுகல், கானா (3 பாயிண்ட்) , உருகுவே (1 பாயிண்ட்) , தென் கொரியா (1 பாயிண்ட்) ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.