மேலும் அறிய

Ronaldo: இனி சவுதி அரேபியாவுக்காக களம் இறங்கும் ரொனால்டோ; வருஷத்துக்கு 75 மில்லியன் டாலர் சம்பளம்..!

Ronaldo: மான்செஸ்டர் உடனான ஒப்பந்த முடிவடையவுள்ள நிலையில் இனி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சவுதி அரேபியாவில் உள்ள ஜெயிண்ட்ஸ் அல் நாசர் கிளபுக்காக விளையாடவுள்ளார்.

Ronaldo: மான்செஸ்டர் உடனான ஒப்பந்த முடிவடையவுள்ள நிலையில் இனி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சவுதி அரேபியாவில் உள்ள ஜெயிண்ட்ஸ் அல் நாசர் கிளபுக்காக விளையாடவுள்ளார். 

இந்த வார தொடக்கத்தில் மான்செஸ்டர் யுனைடெட் உடனான ஒப்பந்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபிய ஜாம்பவான்களான அல் நாசருடன் தனது கால்பந்தாட்டதை தொடரவுள்ளார்.  ஒப்பந்தம் முடிவடைந்ததால் ரொனால்டோ மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அதிகாரப்பூர்வமாக பிரியவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் முடித்துக் கொள்ள மேலும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அது, ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கிளப் மற்றும் மேலாளர் எரிக் டென் ஹாக்கை விமர்சித்தார். ரொனால்டோ, 'பியர்ஸ் மோர்கன் அன்சென்சார்டு' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, கிளப்பால்தான் காட்டிக் கொடுக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும், மூத்த அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றதாகவும் கூறியிருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Piers Morgan Uncensored (@piersmorganuncensored)

நேர்காணலைத் தொடர்ந்து, கடந்த வாரம் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப், ரொனால்டின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் "தகுந்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது" என்று கூறியிருந்தது.  இப்போது, ​​இவை அனைத்திற்கும் மத்தியில், 37 வயதான கால்பந்து ஜாம்பவான் உலகக் கோப்பைக்குப் பிறகு சவுதி அரேபிய கிளப்பான அல் நாசருக்கு விளையாட மூன்று ஆண்டு $ 225 மில்லியன் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது. ரொனால்டோவுக்கு வழங்கப்படும் விதிமுறைகள் ஆண்டுக்கு $75 மில்லியன் மதிப்புடையதாக இருக்கும்.  தற்போது தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடிக்கொண்டிருக்கும் ரொனால்டோ, சிறிது காலமாக அல் நாசரில் விளையாட ஆர்வத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது, ​​கிளப்பில் விளையாடும் ஆர்வம் முன்பை விட அதிகமாகவே உள்ளது.

சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ்,  கடந்த ஏப்ரல், மேவில் இருந்தே இரு தரப்பும் தொடர்பில் இருந்ததாகவும், எனவே இப்போது பேச்சுக்கள் ஒப்பீட்டளவில் மேம்பட்டுள்ளதாகவும் ஆனால் ரொனால்டின் இறுதி முடிவுக்காக காத்திருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது. ரொனால்டோ இந்த வாய்ப்பை ஏற்க விரும்பினால், இந்த ஒப்பந்தம் முடிவடைய நீண்ட காலம் எடுக்கும் என்றும் சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது. ஒன்பது லீக் பட்டங்களை வென்ற அல் நாச்ர் ஆசியாவின் வெற்றிகரமான கிளப்புகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், கிறிஸ்டியானோ ரொனால்டோ, வியாழன் அன்று கானாவுடனான போர்ச்சுகல் உலகக் கோப்பை மோதலில் கோல் அடித்த பின்னர், ஐந்து வெவ்வேறு FIFA உலகக் கோப்பைகளில் ஒரு கோல் அடித்த வரலாற்றில் முதல் கால்பந்து வீரர் இவர்தான்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget