(Source: ECI/ABP News/ABP Majha)
FIFA WORLDCUP 2022: உலகக்கோப்பை கால்பந்தை கலக்கும் 3 ஆசிய அணிகள்; வரலாற்றில் இதுதான் முதல்முறை..!
FIFA WORLDCUP 2022: கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் 2வது சுற்றுக்கு 3 ஆசிய அணிகள் முன்னேறுவது இதுதான் முதல் முறையாகும்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் 29 நாட்களுக்கான திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதின. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்தித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதாவது லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறியுள்ளன.
இந்த போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு அதாவது நாக்-அவுட் சுற்றுக்கு ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா இரண்டு அணிகள் தேர்வாகியுள்ளன. அதாவது, நெதர்லாந்து, அமெரிக்கா, அர்ஜெண்டினா, பிரேசில், ஜப்பான், கோரிட்டா, தென் கொரியா, பிரான்ஸ், போலாந்து, இங்கிலாந்து, செனகல், ஸ்பெயின், மொரோக்கோ, போர்ச்சுகல், ஸ்வசர்லாந்து அணிகள் அடுத்த சுற்றான நாக் - அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
View this post on Instagram
இவற்றில் இன்று நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன. அதேபோல், நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில் அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பை வரலாற்றில் இந்த முறைதான் லீக் சுற்றுகள் முடிந்து, 2வது சுற்றுக்கு மூன்றூ ஆசிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இம்முறை ஆசிய மண்டலத்தில் இருந்து ஜப்பான், தென் கொரியா, கத்தார், சவுதி அரேபியா, ஈரான், ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றிருந்தன. இவற்றில் தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா 3 அணிகள் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதுவரை நடந்த உலகக் கோப்பை வரலாற்றில் ஆசிய மண்டலத்தில் இருந்து 3 அணிகள் 2வது சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
இன்று நடக்கும் இரண்டு போட்டிகளில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியான அர்ஜெண்டினா அணியை எதிர் கொள்ளவுள்ளது.